பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவத் தளபதிகள் மாநாடு புதுதில்லியில் தொடங்குகிறது
Posted On:
01 APR 2025 3:56PM by PIB Chennai
ராணுவ தளபதிகள் மாநாடு 2025 ஏப்ரல் 01 முதல் 4 வரை புதுதில்லியில் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்வதற்கும் மதிப்பிடுவதற்கும், வளர்ந்து வரும் சவால்களைச் சமாளிப்பதற்கான முக்கிய செயல்பாட்டு முன்னுரிமைகள் குறித்து விவாதிப்பதற்கும் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு இந்த மாநாடு ஒரு தளமாக செயல்படுகிறது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாதுகாப்பு அமைச்சருக்கான அமர்வுக்கு தலைமை தாங்கி முக்கிய உரையாற்றுவார். இந்த அமர்வில் 'சீர்திருத்த ஆண்டில்' இந்திய ராணுவத்தின் கவனம் குறித்த விளக்கக்காட்சியும் இடம்பெறும். ராணுவத்தின் மூத்த தலைவர்களிடையே முப்படைத் தளபதி இந்த மாநாட்டில் முக்கிய உரையாற்றுவார்.
சுறுசுறுப்பான தகவமைப்பு, தொழில்நுட்ப ரீதியாக இயக்கப்பட்ட மற்றும் எதிர்காலத்திற்கு தயாராக உள்ள படை என்ற இந்திய ராணுவத்தின் இலக்குடன் இணைந்து, மூத்த நிபுணர்களுடன் தீவிர விவாதங்கள் நிகழ்த்தப்படும். விவாதத்தின் கீழ் உள்ள பிற பிரச்சினைகள் ஒட்டுமொத்த நிறுவன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், களப்படையின் செயல்முறைகளை எளிதாக்குவதிலும் கவனம் செலுத்தும். வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அதன் பணியாளர்களின் நலன் மற்றும் நல்வாழ்வு தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் இந்த மாநாடு விவாதிக்கும்.
***
(Release ID: 2117274)
TS/PKV/RR/SG
(Release ID: 2117404)
Visitor Counter : 26