உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, மகாராஜா அக்ரசென்னின் பிரமாண்டமான சிலையை திறந்து வைத்தார்
Posted On:
31 MAR 2025 5:00PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா இன்று ஹரியானாவின் ஹிசாரில் மகாராஜா அக்ரசென்னின் பிரம்மாண்டமான சிலையை திறந்து வைத்ததோடு புதிதாக கட்டப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவையும் அவர் திறந்து வைத்தார். அங்கு முதுநிலை மாணவர்களுக்கானவிடுதிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், ஹரியானா முதலமைச்சர் திரு. நயப் சிங் சைனி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா தமது உரையில், பண்டைய காலங்களிலிருந்து இந்தியாவின் கலாச்சாரம், மதிப்புகள் மற்றும் பாரம்பரியங்களை வளப்படுத்தவும் பாதுகாக்கவும் ஹரியானா மண் பணியாற்றியுள்ளது என்றார். மகாபாரத காலத்திலிருந்து சுதந்திரப் போராட்டம் வரையிலும், சுதந்திரத்திற்குப் பிறகும் கூட, நாட்டின் வளர்ச்சிக்கு ஹரியானாவின் பங்களிப்பு பெரிய மாநிலங்களை விட எப்போதும் மிக அதிகமாகவே இருந்துள்ளது என்று அவர் கூறினார்.
ஏறத்தாழ 5 லட்சம் பேர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறும் இந்தப் பெரிய மருத்துவமனையில், ஒவ்வொரு ஆண்டும் 180 மாணவர்கள் மருத்துவப் படிப்பை மேற்கொள்கின்றனர்,.நோயாளிகள் பல்வேறு வகையான நவீன மருத்துவ வசதிகளைப் பெறுகின்றனர் என்று திரு அமித் ஷா கூறினார். இவை அனைத்தும் ஓ.பி. ஜிண்டால் அமைத்த அடித்தளத்தால் சாத்தியமானது. இன்று, மகாராஜா அக்ரசென் சிலையுடன், புதிதாக கட்டப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், முதுநிலை விடுதிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முன்முயற்சிகள் இந்த நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான மற்றொரு படியாகும் என்று அவர் கூறினார்.
மகாராஜா அக்ரசென் ஒரு தனித்துவமான ஆட்சியாளர் என்றும், அவரது காலத்தில், தலைநகரில் 1 லட்சம் மக்கள் தொகை இருந்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். புதிதாக யாராவது அங்கு வரும்போதெல்லாம், மற்றவர் அவர்களுக்கு ஒரு செங்கல் மற்றும் ஒரு ரூபாய் கொடுத்து வீடு கட்ட உதவினார்கள். மகாராஜா அக்ரசென் மாநிலத்திற்கு சுமையாக இல்லாமல் ஒவ்வொரு தனிநபரின் செழிப்பு மற்றும் நலனுக்கு வழி வகுத்தார் என்று திரு ஷா கூறினார். மகாராஜா அக்ரசென் ஒட்டுமொத்த மாநிலத்தின் மதிப்புகளை வளர்க்க பாடுபட்டதாக அவர் கூறினார். மகாராஜா அக்ரசேனர் தனது ராஜ்யத்தில் யாரும் பசியுடன் படுக்கைக்குச் செல்லவில்லை, யாரும் தலைக்கு மேல் கூரை இல்லாமல் வாழவில்லை, யாரும் வேலை இல்லாமல் இல்லை என்பதை உறுதி செய்தார். இந்த மூன்று விஷயங்களுக்கும் மகாராஜா அக்ரசென் தனது நல்லாட்சியின் மூலம் உத்தரவாதம் அளித்ததாக அவர் கூறினார். இன்று, அகர்வால் சமூகத்தின் அனைத்து குலங்களிலும் உள்ள ஒவ்வொரு தனிநபரும் ஒரு தொழில்முனைவோர், நாட்டிற்கு தங்களை அர்ப்பணித்தவர்கள், மற்றவர்களுக்கு சேவை செய்பவர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறார்கள் என்று உள்துறை அமைச்சர் மேலும் கூறினார்.
மகாராஜா அக்ரசேனர் காட்டிய பாதையை பிரதமர் திரு. நரேந்திர மோடியும் பின்பற்றி வருவதாக திரு அமித் ஷா கூறினார். பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில், நாட்டில் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு மேல் உயர்ந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி 4 கோடி வீடுகள், 81 கோடி மக்களுக்கு ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ இலவச ரேஷன் பொருட்கள், 11 கோடி குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகள் மற்றும் 12 கோடி குடும்பங்களுக்கு கழிப்பறைகளை வழங்கியுள்ளார். நாட்டிலேயே ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை வசதி செய்து கொடுத்த முதல் அரசு ஹரியானா அரசு என்று அவர் கூறினார். மோடி அரசு 15 கோடி மக்களுக்கு குழாய் வழிக் குடிநீர், 60 கோடி மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை சுகாதாரப் பாதுகாப்பு, ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் ஆகியவற்றை வழங்கியுள்ளது, இப்போது ஒவ்வொரு வீட்டிற்கும் சுய வேலைவாய்ப்பை வழங்க கூட்டுறவு அமைப்புகள் மூலம் செயல்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில், கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் மாற்றங்களை நாடு கண்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். மக்களின் ஆரோக்கியத்திற்கு மோடி அரசு ஒரு முழுமையான அணுகுமுறையை எடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அரசு முதலில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு எரிவாயு சிலிண்டரை வழங்கியது, இது பெண்களின் ஆரோக்கியத்துடன் நேரடியாக தொடர்புடையது என்று அவர் விளக்கினார். அதைத் தொடர்ந்து, யோகா உலகளவில் பிரபலப்படுத்தப்பட்டது, பின்னர் ஃபிட் இந்தியா இயக்கம், ஊட்டச்சத்து இயக்கம், இந்திரதனுஷ் இயக்கம் மற்றும் 5 லட்சம் வரை சுகாதாரப் பாதுகாப்பு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த முன்முயற்சிகள் அனைத்தும் சுகாதாரம் தொடர்பானவை என்று குறிப்பிட்ட அவர், இவை அனைத்தையும் ஒருங்கிணைந்த அணுகுமுறையாக இணைக்க பிரதமர் மோடி பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
மருத்துவ உள்கட்டமைப்புத் துறையில் மோடி அரசு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். மோடி அரசு பொது சுகாதார மையங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்களுக்காக 64,000 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது, மருத்துவ உள்கட்டமைப்புக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 730 ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள், 4,382 வட்டார பொது சுகாதார மையங்கள் மற்றும் 602 புதிய சிக்கலான பராமரிப்பு பெட்டிகள் நிறுவப்பட்டதையும் அவர் எடுத்துரைத்தார். 2013-14 ஆம் ஆண்டில், நாட்டின் சுகாதார பட்ஜெட் 33,000 கோடி ரூபாயாக இருந்தது, இது பிரதமர் மோடியால் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, 2025-26 பட்ஜெட்டில் 1 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்ள்ளது.
2014-ல் நாட்டில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்த நிலையில் 2024-ல் 23 எய்ம்ஸ் மருத்துவமனைகள்இருக்கின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இதேபோல், 2014 ஆம் ஆண்டில், நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன, இன்று 766 உள்ளன. 2014-ல் 51,000 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை தற்போது 1.15 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 85,000 இடங்கள் சேர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 2014 ஆம் ஆண்டில், 31,000 முதுகலை இடங்கள் இருந்தன, அவை இப்போது 73,000 ஆக அதிகரித்துள்ளன என்றும் அவர் கூறினார். அடுத்த 5 ஆண்டுகளில், நாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லாத ஒரு மாவட்டம் கூட இருக்காது என்று திரு ஷா உறுதியளித்தார்..
***
TS/PKV/KV
(Release ID: 2117053)
Visitor Counter : 27