குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து
Posted On:
30 MAR 2025 8:23PM by PIB Chennai
ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:
“ரமலான் பண்டிகையை முன்னிட்டு, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் நம்மை ஒன்றிணைக்கும் பொதுவான பிணைப்புகளிலிருந்து நாம் பெறும் வலிமையை ரமலான் நமக்கு நினைவூட்டுகிறது. இந்த புனித நாளின் சாராம்சம் வெறும் கொண்டாட்டத்திற்கு அப்பாற்பட்டது; நமது பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் ஒற்றுமை, இரக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய அரசியலமைப்பு கொள்கைகளை இது உள்ளடக்கியுள்ளது.
இந்தப் புனிதத் தருணம் பிரதிபலிக்கும் புதுப்பித்தல் மற்றும் கூட்டு நல்லிணக்கத்தின் ஆழமான உணர்வைக் கொண்டாடுவோம். நமது முன்னோக்கிய பாதையை ஒளிரச் செய்யும் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க, நெகிழ்திறன் கொண்ட தேசமாக நம்மை இணைக்கும் மதிப்புகளுக்கு நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்ள பண்டிகை உணர்வு நம்மை ஊக்குவிக்கட்டும்.”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2116905®=3&lang=1
***********************
BR/KV
(Release ID: 2116993)
Visitor Counter : 22