புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் சிக்லியில் 5.4 ஜிகாவாட் உயர் தொழில்நுட்ப தொழிற்சாலையை மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி திறந்து வைத்தார்

Posted On: 29 MAR 2025 4:46PM by PIB Chennai


மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, குஜராத்தின் சிக்காலியில் வாரி எனர்ஜியின் அதிநவீன 5.4 ஜிகாவாட் சூரிய மின்கல உற்பத்தி ஆலையைத் திறந்து வைத்தார். மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், குஜராத்தின் எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் அமைச்சர் திரு கனுபாய் தேசாய்; உள்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு. ஹர்ஷ்பாய் சங்வி, மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் நீர்வளத்துறை இணையமைச்சர் திரு. முகேஷ்பாய் படேல், மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் திரு. பி.பி. சவுத்ரி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, "இந்த அற்புதமான ஆலை, இந்தியாவின் உணர்வை உள்ளடக்கியது மற்றும் உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சூழ்நிலையில் இந்தியாவின் வளர்ந்து வரும் நிபுணத்துவத்தின் வடிவத்தில் நிற்கிறது. தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்கும் நமது தேசிய தொலைநோக்குடன் இது முழுமையாக ஒத்துப்போகிறது. இந்த ஆலை உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், மேம்பட்ட சூரிய தொழில்நுட்பங்களின் முக்கிய ஏற்றுமதியாளராக இந்தியாவை நிலைநிறுத்தும்”, என்று கூறினார்.

2014-இல் பிரதமர் திரு மோடி பதவியேற்ற பிறகுதான் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது என்று திரு பிரல்ஹாத் ஜோஷி கூறினார். “உலகளாவிய எரிசக்தி புரட்சியில் நாம் பங்கேற்பது மட்டுமின்றி, அதற்குத் தலைமை தாங்கவும் செய்கிறோம். இன்று, உலகின் மூன்றாவது பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனாக நாம் மாறியுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் சூரிய மின்சக்தி திறன் அசாதாரணமாக அதிகரித்துள்ளது, 2014 இல் 2.82 ஜிகாவாட்டிலிருந்து இன்று 104 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது, இது 3580% குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது”, என்றார் அவர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116602 


************* 

BR/KV


(Release ID: 2116836) Visitor Counter : 12