மத்திய பணியாளர் தேர்வாணையம்
ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி (முதல்நிலை) தேர்வு- 2025 -ன் இறுதி முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது
Posted On:
29 MAR 2025 12:24PM by PIB Chennai
2025 பிப்ரவரி 9 அன்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) நடத்திய ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி (முதல்நிலை) தேர்வு, 2025-ன் முடிவின் அடிப்படையில், பதிவு எண்களைக் கொண்ட விண்ணப்பதாரர்கள் ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி (முதன்மை) தேர்வு, 2025-க்கு தகுதி பெற்றுள்ளனர். யு.பி.எஸ்.சி.யின் இணையதளத்திலும் முடிவு கிடைக்கிறது https://www.upsc.gov.in
பரிந்துரைக்கப்பட்ட தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு உட்பட்டு, தேர்வின் அனைத்து நிலைகளிலும் இந்த விண்ணப்பதாரர்களின் தேர்வு முற்றிலும் தற்காலிகமானது. தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 2025-ம் ஆண்டு ஜூன் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி (முதன்மை) தேர்வு, 2025-ம் ஆண்டில் பங்கேற்க வேண்டும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 04 செப்டம்பர், 2024 அன்று இந்திய அரசிதழ், சுரங்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி தேர்வு, 2025-ன் விதிகளையும், ஆணையத்தால் வெளியிடப்பட்ட 04.09.2024 தேதியிட்ட தேர்வு அறிவிப்பைப் பார்க்கவும். ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி (முதன்மை) தேர்வு, 2025 தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து இரண்டாம் கட்டத்திற்கான இ-அட்மிட் அட்டைகளை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யலாம். ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி (முதல்நிலை) தேர்வு, 2025 இன் மதிப்பெண்கள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது,
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய வளாகத்தில் ஒரு கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு / முடிவு தொடர்பான எந்தவொரு தகவலையும் / விளக்கங்களையும் வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நேரில் அல்லது தொலைபேசி எண்கள் 23388088, (011)-23385271/23381125/23098543 மூலம் பெறலாம். வேட்பாளர்கள் தங்கள் பிரதிநிதித்துவங்களை usgeol-upsc[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்..
***
PKV/KV
(Release ID: 2116548)
Visitor Counter : 50