திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
2015 முதல் 2024 வரை பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (கௌஷல் விகாஷ் யோஜனா) 1,60,33,081 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்
Posted On:
26 MAR 2025 4:21PM by PIB Chennai
திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் தனது முன்னோடித் திட்டமான பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை (கௌஷல் விகாஷ் யோஜனா)2015-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு குறுகிய கால பயிற்சி மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சியும், மறுதிறன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2015-ம் ஆண்டு முதல் 31.12.2024 வரை மொத்தம் 1,60,33,081 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் 4.0-ன் கீழ், நடப்பு நிதியாண்டு (31.12.2024 நிலவரப்படி) உட்பட கடந்த மூன்று நிதியாண்டுகளில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் ரூ.1244.52 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஜெயந்த் சவுத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/IR/RR/KR/DL
(Release ID: 2115434)
Visitor Counter : 22