சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் நிதி வழங்கல்
Posted On:
26 MAR 2025 2:48PM by PIB Chennai
பட்டியல் சாதியினருக்கான தேசிய உதவித்கல்விதொகை (ஃபெல்லோஷிப்)திட்டத்தின் கீழ், 2025 ஜனவரி மாதம் வரை 4,350 அறிஞர்கள் உதவித்தொகை பெற்றுள்ளனர். இந்த 4,350 அறிஞர்களில் 3,775 பேர் 2025 பிப்ரவரி மாதம் வரை உதவித்தொகை பெற்றுள்ளனர்.
2024-25-ம் நிதியாண்டில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகை திட்டத்தின் கீழ் ரூ.55.00 கோடி ஒதுக்கப்பட்டு, மறு ஒதுக்கீடு மூலம் கூடுதலாக ரூ.14.96 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2,180 அறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க மொத்தம் 69.96 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில், தேசிய உதவித்தொகை – இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் திட்டத்தின் கீழ் 1,902 பயனாளிகள் உதவித்தொகை பெற்றுள்ளனர்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு. ராம்தாஸ் அத்வாலே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2115193)
TS/IR/RR/KR
(Release ID: 2115315)
Visitor Counter : 19