சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: விளிம்புநிலை சமூகங்களுக்கான வெளிநாட்டுக் கல்வி உதவித்தொகை
Posted On:
26 MAR 2025 2:49PM by PIB Chennai
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் வழங்கும் தேசிய வெளிநாட்டுக் கல்வி உதவித்தொகையின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் உதவித்தொகை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2019-20-ம் ஆண்டிலிருந்து 2023-24-ம் ஆண்டு வரை எஸ்சி மாணவர்கள் 397 பேரும், நாடோடி/சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த 14 மாணவர்களும், எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த 74 மாணவர்களும் வெளிநாட்டு கல்வி உதவித் தொகையைப் பெற்றுள்ளனர்.
செலவின நிதிக் குழுவின் படி, பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் பட்டியலுக்கு பழங்குடியினருக்கான தேசிய வெளிநாட்டு உதவித்தொகை திட்டம் 2021-22 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த காலகட்டத்திற்கான மொத்த பட்ஜெட் செலவு ரூ 20 கோடியாகும். இருப்பினும், நடப்பு 2024-25-ம் நிதியாண்டு வரை அமைச்சகத்தின் மொத்த செலவு ரூ.21.95 கோடியாக உள்ளது. இதனால், அமைச்சகம் நான்கு ஆண்டுகளுக்குள் ஐந்தாண்டு பட்ஜெட்டை செலவிட்டுள்ளது. இதன் விளைவாக 2025-26 நிதியாண்டுக்கான திட்டத்தின் கீழ் பட்ஜெட்டில் குறைந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யவும், 2025-26 நிதியாண்டில் திட்டத்தை நிலைநிறுத்தவும், கூடுதல் நிதிக்கு செலவின நிதிக் குழுவின் ஒப்புதலைப் பெறுவதற்கான செயல்முறையை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு. ராம்தாஸ் அத்வாலே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2115195)
TS/IR/RR/KR
(Release ID: 2115226)
Visitor Counter : 23