ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி
प्रविष्टि तिथि:
25 MAR 2025 4:59PM by PIB Chennai
2024-25 நிதியாண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கு 86,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2025-26 நிதியாண்டில், அரசு 86,000 கோடி ரூபாய் என்ற அதே அளவு நிதியை ஒதுக்கியுள்ளது.
இது தேவை அடிப்படையிலான திட்டம் என்பதால், களத்தில் வேலைக்கான தேவையின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி கிடைக்கச் செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. ஊரக வளர்ச்சி அமைச்சகம், இத்தேவையை உன்னிப்பாகக் கவனித்து, தேவைப்படும்போது நிதி அமைச்சகத்திடமிருந்து கூடுதல் நிதியை கோருகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/SG/KR/DL
(रिलीज़ आईडी: 2114981)
आगंतुक पटल : 191