தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கான தத்தோபந்த் தெங்கடி தேசிய வாரியத்தின் 84வது ஆண்டுக் கூட்டத்திற்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்குகிறார்

Posted On: 25 MAR 2025 5:04PM by PIB Chennai

தொழிலாளர் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கான தத்தோபந்த் தெங்கடி தேசிய வாரியத்தின் 84வது ஆண்டுக் கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்குகிறார். நாளை நடைபெறும் இக்கூட்டம், நாட்டிலுள்ள தொழிலாளர்களுக்கான கல்வித் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதையும் மதிப்பாய்வு செய்வதையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிகழ்வில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர், பல்வேறு அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

புதுதில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த வாரியம் 1958-ம் ஆண்டு முதல் அதன் 50 பிராந்திய இயக்குநரகங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளித்து வருகிறது. அமைப்புசாரா மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் பல்வேறு தொழிலாளர் நலத் திட்டங்கள்  குறித்து கல்வி கற்பிக்கும் வகையில், அமைப்புசாரா மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு மனிதவளம் மற்றும் தொழில்துறை மேம்பாடு குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு திட்டங்களில் கவனம் செலுத்துகிறது.

இவ்வாரியம் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், நேரடிப் பலன்களை உறுதி செய்யவும் அவர்களைப் பல்வேறு முதன்மை அரசுத் திட்டங்களில் சேர்க்கவும் விழிப்புணர்வு மற்றும் பதிவு முகாம்களை நடத்தி வருகிறது. கூடுதலாக, வாரியம் பல்வேறு நிறுவனங்களுடன் ஒத்துழைத்து தொழிலாளர்களுக்கு திறன், மறுதிறன் மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்குகிறது.

தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக் குழுமத்திடமிருந்து விருது வழங்கும் அமைப்பு அந்தஸ்தைப் பெறும் நடவடிக்கையிலும் இவ்வாரியம் ஈடுபட்டுள்ளது.

***

TS/IR/RR/KR/DL


(Release ID: 2114969) Visitor Counter : 24