ஜவுளித்துறை அமைச்சகம்
மத்திய குடிசைத் தொழில்கள் கழகம் இந்திய கைவினைப் பொருட்கள் குறித்த விநாடி வினா போட்டியை ஏற்பாடு நடத்துகிறது
प्रविष्टि तिथि:
25 MAR 2025 2:17PM by PIB Chennai
மத்தியக் குடிசைத் தொழில்கள் கழகம், மைகவ் (மின்னணு மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சகம், மத்திய அரசு) (https://quiz.mygov.in/quiz/quiz-on-know-about-crafts-of-india-through-the-cottage/) இணையதளத்துடன் இணைந்து "இந்தியாவின் கைவினைப் பொருட்கள்" பற்றிய தனது முதலாவது விநாடி வினா போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. நாட்டின் தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதில் கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர் சமூகத்தின் பங்களிப்பு மற்றும் மத்திய குடிசை தொழில்கள் கழகத்தின் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விநாடி வினா போட்டியில் நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் ("காட்டேஜின்" ஊழியர்கள் மற்றும் குடும்பங்களைத் தவிர) பங்கேற்கலாம். 2025 ஏப்ரல் 30 வரை விநாடி வினா போட்டியில் கலந்து கொள்ளலாம். முதல் 03 வெற்றியாளர்களுக்கு "மத்திய குடிசைத் தொழில்கள் கழகம்" மூலம் பரிசு வழங்கப்படும். அதே நேரத்தில், மைகவ் தளத்தில் உறுதிமொழி (https://pledge.mygov.in/support-women-artisans/) ஏற்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் 100 பெண்களுக்கு கைவினைஞர் ஒருவர் தயாரித்த நினைவுப் பரிசு பரிசாக வழங்கப்படும்.
***
(Release ID: 2114778)
TS/IR/RR/KR
(रिलीज़ आईडी: 2114903)
आगंतुक पटल : 27