சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுகாதாரச் செலவுகளைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 25 MAR 2025 1:51PM by PIB Chennai

தேசிய சுகாதார கணக்கீடுகளின்படி மொத்த சுகாதார செலவினங்களில் மக்களின் சொந்த செலவு தொடர்ந்து குறைந்து வருகிறது. 2014-15-ம் ஆண்டில்  62.6% ஆக இருந்த செலவு 2021-22இல் 39.4% ஆகக் குறைந்துள்ளது.  இதை மேலும் குறைக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

2014-15-ம் ஆண்டில் 29.0% ஆக இருந்த அரசின் சுகாதாரச் செலவு 2021-22-ம் ஆண்டில் 48.0% ஆக அதிகரித்துள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் உட்பட அனைவருக்கும் அணுகக்கூடிய, குறைந்த செலவிலான, தரமான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு தேசிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியுள்ளது. இந்த முக்கிய திட்டங்கள்/திட்டங்கள் சுகாதார சேவைகளைப் பெறுவதற்கான செலவுகளைக் குறைப்பதில் பங்களித்துள்ளன, அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தேசிய சுகாதாரக் குழுமம்: தேசிய சுகாதார குழுமத்தின் கீழ், மக்களுக்கு எளிதில் மற்றும் கட்டுப்படியாகும் சுகாதார சேவையை வழங்குவதில் மாநில அரசுகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம், அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பை ஏற்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மேலும், பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டத்தின் கீழ் தரமான அடிப்படை (ஜென்ரிக்)மருந்துகள் அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர்  திருமதி அனுப்பிரியா படேல் இதனைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2114761)

TS/PLM/SG/KR

 

 


(रिलीज़ आईडी: 2114877) आगंतुक पटल : 35
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Bengali