புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தரவு சார்ந்த கொள்கை, புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை வலுப்படுத்துவதற்காக தேசிய புள்ளியியல் அலுவலகமும், அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனமும் இணைந்து பயிலரங்கை நடத்தின

Posted On: 25 MAR 2025 9:09AM by PIB Chennai

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமானது அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து, ஐஐஎம் அகமதாபாத் வளாகத்தில் "ஆராய்ச்சி மற்றும் கொள்கைக்கான பொதுத் தரவு மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள்" குறித்த பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்தது. இந்த முயற்சி தேசிய தரவுச் சூழலை மேம்படுத்துவதற்கும் ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தை மேம்படுத்துவதற்கும் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தற்போதைய முயற்சிகளுடன் ஒத்திசைவானதாக உள்ளது.

இந்த நிகழ்வில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகச் செயலாளரும், தேசிய புள்ளியியல் அலுவலகத் தலைவருமான டாக்டர் சவுரப் கார்க், அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவன இயக்குநர் (ஐஐஎம்ஏ) பேராசிரியர் பாரத் பாஸ்கர், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக தலைமை இயக்குநர், திரு. பி.ஆர். மேஷ்ராம், அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள்; ஆசிரியர்கள், மாணவர்கள், முதன்மைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கொள்கை சார்ந்த சவால்களை எதிர்கொள்ளுதல், பொது தரவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் கல்வி ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

கொள்கை உருவாக்கத்தில் செயற்கை நுண்ணறிவின் மாற்றத்தக்க திறனை ஐஐஎம்ஏ இயக்குநர் பேராசிரியர் பாரத் பாஸ்கர் எடுத்துரைத்தார். "செயற்கை நுண்ணறிவு இறுதி செய்வதை கணிசமாக மேம்படுத்த முடியும் என்றாலும், நியாயம் மற்றும் துல்லியத்தை உறுதிப்படுத்த பாதுகாப்பு அம்சங்களை நிறுவுவது அவசியம் என்று கூறினார். பொது நலனுக்கான நன்மைகளை அதிகரிப்பதில் ஒத்துழைப்பு கவனம் செலுத்த வேண்டும், என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114664

***

(Release ID: 2114664)
TS/IR/RR/KR

 


(Release ID: 2114695) Visitor Counter : 22