சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
பிரதமரின் மேம்பாட்டுத் திட்டம் சிறுபான்மை சமூகங்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறது
प्रविष्टि तिथि:
24 MAR 2025 4:33PM by PIB Chennai
பிரதமரின் மேம்பாட்டுத் திட்டம் என்பது மத்திய சிறுபான்மையின விவகார அமைச்சகத்தின் திட்டமாகும். இது 'வருவாய் ஈட்டுவதற்கான கற்றல் முறை ', 'முடிவில்லாத தொடர் நடவடிக்கை', 'புதிய ஒளி' மற்றும் 'ஆசிரியர் பணி மற்றும் நமது கலாச்சாரம் ஆகிய ஐந்து திட்டங்களை ஒருங்கிணைக்கிறது. இத்திட்டத்தின் மூலம் ஆறு சிறுபான்மை சமூகங்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது.
திறன் மேம்பாடு, பயிற்சி
பெண்கள் தலைமைத்துவம் மற்றும் தொழில்முனைவோர்
கல்வி (தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம் மூலம் கல்வி வழங்குவது)
உள்கட்டமைப்பு மேம்பாடு (பிரதமரின் மக்கள் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகள் திட்டத்தின் மூலம்)
தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகம் வழங்கும் கடன் திட்டங்களுடன் பயனாளிகளை இணைப்பதன் மூலம் கடன் உதவிகளை எளிதாக்கவும் இந்த திட்டம் வழிவகை செய்கிறது.
கைவினைப் பொருட்களுக்ன ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், இது திட்டத்தின் பாரம்பரிய பயிற்சிக்கான அம்சங்களின் அடிப்படையில் பயிற்சி பெற்ற கைவினைஞர்களுக்கு (i) சந்தைப்படுத்தல், (ii) பயிற்சிக்கான பாடத்திட்டங்களை உருவாக்குதல் (iii) கைவினைஞர் தயாரிப்புகளுக்கு வர்த்தக முத்திரையை நிலைப்படுத்தல் (iv) அமைச்சின் நிகழ்வுகள் / கண்காட்சியின் போது விழிப்புணர்வு திட்டத்தை ஏற்பாடு செய்தல்; (v) உற்பத்தியாளர் குழு நிறுவனங்களை உருவாக்க கைவினைஞர்களை அணிதிரட்டுதல்; ஆகியவற்றுக்கு இத்திட்டம் உதவுகிறது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு இதனைத் தெரிவித்தார்.
***
TS/SV/KPG/DL
(रिलीज़ आईडी: 2114592)
आगंतुक पटल : 45