நிலக்கரி அமைச்சகம்
11-வது சுற்று வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தில் பன்னிரண்டு சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டன
Posted On:
24 MAR 2025 3:38PM by PIB Chennai
நிலக்கரி அமைச்சகம் டிசம்பர் 05, 2024 அன்று வணிக சுரங்கத்திற்கான 11வது சுற்று நிலக்கரி சுரங்க ஏலங்களை தொடங்கியது.ஸ இது நிலக்கரித் துறையில் தற்சார்பை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது. ஏலத்தில், மொத்தம் பன்னிரண்டு நிலக்கரி சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டன. இதில் எட்டு முழுமையாக ஆராயப்பட்ட சுரங்கங்கள் மற்றும் நான்கு பகுதியளவு ஆராயப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் அடங்கும்.
புதிதாக ஏலம் விடப்பட்ட சுரங்கங்கள் 3,330 கோடி ரூபாய் (ஓரளவு ஆராயப்பட்ட சுரங்கங்களைத் தவிர்த்து) ஆண்டு வருவாயை உருவாக்கும் மற்றும் சுமார் 2,319 கோடி ரூபாய் மூலதன முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, இந்த சுரங்கங்கள் 20,902 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிலக்கரி சுரங்கப் பிராந்தியங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கும்.
2020 ஆம் ஆண்டில் வணிக நிலக்கரி சுரங்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, நிலக்கரி அமைச்சகம் மொத்தம் 125 நிலக்கரி சுரங்கங்களை வெற்றிகரமாக ஏலம் விட்டுள்ளது. இதன் ஒருங்கிணைந்த உற்பத்தி திறன் ஆண்டுக்கு 273.06 மில்லியன் டன்கள் ஆகும். இந்த சுரங்கங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதிலும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த சுரங்கங்கள் 38,767 கோடி ரூபாய் ஆண்டு வருவாயை ஈட்டும். சுமார் 4,69,170 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
***
TS/PLM/LDN/KR/DL
(Release ID: 2114541)