ஜல்சக்தி அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி: புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல்
प्रविष्टि तिथि:
24 MAR 2025 12:20PM by PIB Chennai
ஆகஸ்ட் 2019 முதல், நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் போதுமான அளவில், பரிந்துரைக்கப்பட்ட தரத்தில் குடிநீர் வழங்குவதற்காக மாநிலங்களுடன் இணைந்து ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நீர் மாநிலம் கையாளும் விஷயமாக இருப்பதால், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், குடிநீர் வழங்கல் திட்டங்கள் / பணிகளை திட்டமிடுதல், ஒப்புதல், செயல்படுத்துதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றின் பொறுப்பு மாநில / யூனியன் பிரதேச அரசுகளிடம் உள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்கி உதவுகிறது.
குடிநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்த கையேடு மார்ச் 2023-ல் வெளியிடப்பட்டது. தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியக்கூறுகளைப் பொறுத்து மாநிலங்கள் பொருத்தமான எண்ணிக்கையில் ஒன்று அல்லது பல தொழில்நுட்பங்களின் கலவையை எடுத்துக் கொள்ளலாம். தற்போது மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தெரிவித்தபடி, பல்வேறு வகையான திட்டங்களுக்காக ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் மொத்தம் 35,578 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2114290)
TS/PLM/LDN/KR
(रिलीज़ आईडी: 2114389)
आगंतुक पटल : 28