ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி: உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்த இந்திய ஜவுளித் துறையில் வர்த்தகத் தடைகளைக் குறைத்தல்

प्रविष्टि तिथि: 24 MAR 2025 12:11PM by PIB Chennai

ஏற்றுமதித் திறனை அதிகரிப்பதற்காக, இந்தியா இதுவரை பல்வேறு வர்த்தக கூட்டாளிகளுடன் 14 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் 6 முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

ஜவுளி அமைச்சகமானது சமர்த் என்ற ஜவுளித் துறைக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை  செயல்படுத்தி வருகிறது. தேவை அடிப்படையிலான, வேலைவாய்ப்பு சார்ந்த தேசிய  தொழில்திறன் தகுதி சட்டக வரைவுக்கு இணக்கமான திறன் மேம்பாட்டு திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

அமைப்பு சார்ந்த ஜவுளித் துறை (நூல் நூற்பு மற்றும் நெசவு நீங்கலாக) மற்றும் அது தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும்பாரம்பரியத் துறைகளில் தொழில் திறன் மற்றும் இருக்கும் திறன்களை  புதுப்பித்துக கொள்ளுதல் ஆகியவற்றுக்கான தொழில்துறையின் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதையும் துணைபுரிவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு. பபித்ரா மார்கெரிட்டா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2114279)
TS/IR/RR/KR


(रिलीज़ आईडी: 2114336) आगंतुक पटल : 56
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali