இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா லக்னோவில் நாடு தழுவிய ‘ஃபிட் இந்தியா ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணிக்கு ’ தலைமை தாங்குகிறார்
Posted On:
22 MAR 2025 4:45PM by PIB Chennai
உடல் பருமனுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தி, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா மார்ச் 23 அன்று ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ என்ற தேசிய அளவிலான இயக்கத்தில் பங்கேற்கிறார். மத்திய அமைச்சருடன் மாண்புமிகு உத்தரபிரதேச ஆளுநர் திருமதி. ஆனந்திபென் படேல் மற்றும் உத்தரபிரதேச விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் திரு கிரிஷ் சந்திர யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் கிஷோர் ஜெனா, மும்பையில் உள்ள அழகிய அக்சா கடற்கரையில் சைக்கிள் ஓட்டுதல் இயக்கத்தில் பங்கேற்பார், மேலும் இந்திய உடற்கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர்கள் புதுதில்லியில் இந்த முயற்சியில் பங்கேற்கின்றனர்.
இதுவரை, நாடு தழுவிய சைக்கிள் ஓட்டுதல் 4200 இடங்களில் தோராயமாக 2 லட்சம் நபர்களின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கம் நாடு முழுவதும் காற்று மாசு அளவைக் குறைக்க சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளை ஊக்குவிக்கிறது. சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு அறிவியல் வல்லுநர்கள் மற்றும் பலரின் பங்கேற்புடன் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த முயற்சி நடத்தப்படுகிறது..
***
PKV/KV
(Release ID: 2114040)
Visitor Counter : 42