அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நாடாளுமன்ற கேள்வி: பெண் குழந்தைகள் மத்தியில் அறிவியல் கல்வியை ஊக்குவிப்பதற்கான அரசின் திட்டங்கள்
Posted On:
20 MAR 2025 4:59PM by PIB Chennai
ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) துறைகளில் உயர் கல்வி மற்றும் பணிகளைத் தொடர திறமையான பெண்களை ஊக்குவிப்பதற்காக விக்யான் ஜோதி திட்டத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 2019-20 முதல் செயல்படுத்தி வருகிறது. அனுபவ கற்றல் அமர்வுகள், அறிவியல் முன்மாதிரிகளுடனான கலந்துரையாடல்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் தொழில்துறை ஆய்வகங்களுக்கான வருகைகள், தொழில் வழிகாட்டல் பயிரங்கங்கள் மற்றும் மாணவர்-பெற்றோர் ஆலோசனை அமர்வுகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் திறமைகளை நிலைநிறுத்துவதன் மூலம் ஸ்டெம் துறையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
விஞ்ஞான் ஜோதி திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, 35 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 300 மாவட்டங்களைச் சேர்ந்த 80,000 க்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர். அதன் தாக்கத்தை வலுப்படுத்த, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பல்கலைக்கழகங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள், சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வகங்கள் மற்றும் பிற புகழ்பெற்ற நிறுவனங்கள் உட்பட 250 க்கும் மேற்பட்ட முதன்மையான தேசிய நிறுவனங்களுடன் செயல்படுகிறது. மேலும் ஸ்டெம் துறையில் அதிக பெண்களின் பங்கேற்பை வளர்ப்பதற்கான திட்டத்தின் நோக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அணுசக்தித் துறை, இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113279
-----
RB/DL
(Release ID: 2113480)
Visitor Counter : 20