ஆயுஷ்
வெப்ப அலை தொடர்பாக பொது சுகாதார பாதுகாப்புக்கு ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்
Posted On:
20 MAR 2025 4:21PM by PIB Chennai
வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையிலும், இந்திய வானிலை ஆய்வுத்துறை பல்வேறு பகுதிகளுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ள நிலையிலும், நாடு முழுவதும் உள்ள தனது வலைப்பின்னல் நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் முன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
வெப்ப அலை விழிப்புணர்வு குறித்த நிகழ்வு ஜாம் நகரை அடிப்படையாக கொண்ட ஆயுர்வேதம் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் இன்று (2025 மார்ச் 20) நடத்தப்பட்டது. இங்குள்ள மருத்துவமனை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பம் தொடர்பான உடல்நிலை பாதிப்பை தடுப்பது குறித்த தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மக்களிடம் விநியோகிக்கப்பட்டன.
செய்யக்கூடியவை:
அதிக அளவில் தண்ணீர் அருந்துவது, இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை அருந்துவது, நேரடியான சூரிய வெப்பத்தை தவிர்ப்பது, வெளியே செல்லும் போது குடை அல்லது அகண்ட விளிம்பைக் கொண்ட தொப்பிகளை பயன்படுத்துவது, தொளதொளப்பான பருத்தி ஆடைகளை அணிவது, எளிதில் செரிக்கும் உணவுகளை உட்கொள்வது, தண்ணீரை குளிர்ச்சியாக்கும் வெட்டிவேர் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்துவது, அதிக நீர்சத்து கொண்ட வெள்ளரி போன்ற காய்கறிகள், தர்ப்பூசணி, திராட்சை, முலாம்பழம், போன்ற பழங்களை எடுத்துகொள்வது உள்ளிட்ட தகவல்கள் அவற்றில் இடம் பெற்றிருந்தன.
செய்யக்கூடாதவை:
வெயில் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்ப்பது, வெறுங்காலுடன் வெளியே செல்லாமல் இருப்பது, பகல் பொழுதில் மிகுதியான வெப்பம் உள்ள நேரத்தில் உணவு தயாரிப்பதை தவிர்ப்பது, அவசியம் ஏற்பட்டால் புகை போக்கியை பயன்படுத்துவது, தேநீர், காபி போன்ற சூடான பானங்களை தவிர்ப்பது போன்ற தகவல்கள் துண்டு பிரசுரங்களில் இடம் பெற்றிருந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2113255
***
TS/SMB/AG/KR
(Release ID: 2113302)
Visitor Counter : 58