விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

சந்திரயான்-4 விண்கலத்தை மேம்பட்ட அம்சங்களுடன் விண்ணில் செலுத்த இந்தியா திட்டம்: மக்களவையில் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்

Posted On: 19 MAR 2025 4:56PM by PIB Chennai

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் மனித "ககன்யான்" திட்டத்திற்கு கடுமையான பயிற்சி பெற்று வரும் நான்கு விண்வெளி வீரர்களில், ஒருவரான குரூப் கேப்டன் சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பணியில் சேர தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சந்திரயான் -4, 2040-ம் ஆண்டு நிலவு பயணத்தை இந்தியா நோக்கமாகக் கொண்டிருப்பதால் இதில் தொழில்நுட்பம் முன்னோடியாக இருக்கும்

இத்தகவலை மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மக்களவையில் இன்று (19.03.2025) தெரிவித்தார். ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர்,   பல மேம்பட்ட  தொழில்நுட்பங்கள், சந்திர மாதிரி சேகரிப்பு ஆகியவற்றை இத்திட்டம் கொண்டிருக்கும் என்றார். இந்தப் பணி, 2040 க்குள் தனது சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவுவதற்கான இந்தியாவின் இலக்கை நோக்கிய ஒரு முக்கிய படியாக இருக்கும் என அவர் கூறினார்.

இந்தியாவின் விண்வெளி திறன்களை வலுப்படுத்துவதில் சந்திரயான் -4 இன் முக்கியத்துவத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். "இந்த பணி சந்திரனில் தரையிறங்குவது மட்டுமல்லாமல், எதிர்காலப் பயணங்கள், விண்வெளி நிலைய நடவடிக்கைகளுக்கான முன்னோடியாக இருக்கும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

300 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் கழித்த பின்னர் இன்று அதிகாலை 3.27 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ் பூமியின் மேற்பரப்பில் மீண்டும் தரையிறங்கியது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.

சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112835

***

TS/PLM/AG/DL


(Release ID: 2113006) Visitor Counter : 40