இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகத்தின் வருடாந்திர மாநாட்டை மத்திய விளையாட்டுகள் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்
Posted On:
19 MAR 2025 4:43PM by PIB Chennai
மத்திய இளையோர் விவகாரங்கள், விளையாட்டு, தொழிலாளர் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, "ஊக்கமருந்து எதிர்ப்பு அறிவியல்: கண்டுபிடிப்புகள் மற்றும் சவால்கள்" என்ற கருப்பொருளில் நடைபெறும் தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகத்தில் வருடாந்திர மாநாட்டை- புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் மத்திய விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, அத்துறையின் செயலாளர் திருமதி சுஜாதா சதுர்வேதி, இணைச் செயலாளர் திரு குணால், ஆய்வக இயக்குநர் பேராசிரியர் (டாக்டர்) பி.எல். சாஹு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் சிறப்புரையாற்றிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, விளையாட்டில் தூய்மையான, நியாயமான போட்டி தன்மையை ஊக்குவிப்பதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். ஊக்கமருந்து குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டுமென்று கூறிய அவர் அது குறித்த பாடத்திட்டங்களை பள்ளி பாடத்திட்டத்துடன் சேர்க்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இது குறித்து கிராமப்புறங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் அவர் தொடங்கி வைத்தார். அனைத்து விளையாட்டு வீரர்களும் ஊக்கமருந்து எதிர்ப்பு விதிமுறைகள் குறித்து நன்கு அறிந்து வைத்திருப்பதை உறுதி செயயும் வகையில் விளையாட்டு கூட்டமைப்புகள், கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். மேலும், ஊக்கமருந்து எதிர்ப்பு அறிவியலில் அதிநவீன ஆராய்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றங்களின் பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதிலும், தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார்.
இந்த மாநாடு விஞ்ஞானிகள், பயிற்சியாளர்கள், உடற்கல்வி வல்லுநர்கள், விளையாட்டு கூட்டமைப்புகள், மாணவர்களுக்கு ஊக்கமருந்து எதிர்ப்பு அறிவியலில் ஏற்பட்டுள்ள அண்மைகால முன்னேற்றங்கள் மற்றும் சவால்கள் குறித்த நுண்ணறிவு விவாதங்களில் ஈடுபட ஒரு முக்கிய தளத்தை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112818
***
TS/SV/SG/KR/DL
(Release ID: 2113000)
Visitor Counter : 20