தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிராய் மூலம் தேவையற்ற அழைப்புகளைக் கட்டுப்படுத்துதல்

Posted On: 19 MAR 2025 3:27PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) 12.02.2025 அன்று தொலைத்தொடர்பு வர்த்தக தகவல் தொடர்பு வாடிக்கையாளர் முன்னுரிமை விதிமுறைகள் (TCCCPR) - 2018-ல் திருத்தம் செய்துள்ளது.

7 நாட்களுக்குள் ஒரு வாடிக்கையாளர் இப்போது தனக்கு வந்த ஸ்பேம் வணிகத் தொடர்பு குறித்து புகார் செய்யலாம். நடவடிக்கை எடுப்பதற்கான கால வரம்பு 30 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்பு, ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.

***

TS/PLM/AG/DL


(Release ID: 2112994) Visitor Counter : 11