பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
2023-24 நிதியாண்டில் பிரதமரின் பேறுகால தாய்மார்கள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் 53.76 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் பலன் அடைந்துள்ளனர்
Posted On:
19 MAR 2025 3:55PM by PIB Chennai
உரிய விதிகளுக்கு உட்பட்டு கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் தவணைகளில் ஆறாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் நிதி உதவி பிரதமரின் பேறுகால தாய்மார்கள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இத்திட்டத்தின் விதிகளை 22 டிசம்பர் 2022 அன்று அறிவித்தது.
இத் திட்டத்தின் கீழ், தகுதியான கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ₹5,000/- தொகை வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளி மருத்துவமனையில் பிரசவத்திற்குப் பிறகு ஜனனி சுரக்ஷா யோஜனா (JSY) திட்டத்தின் கீழ் மகப்பேறு நன்மைக்காக அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின்படி மீதமுள்ள ரொக்க ஊக்கத்தொகையைப் பெறுகிறார், இதனால் சராசரியாக, ஒரு பெண் ₹ 6,000/- பெறுகிறார்.
இத்திட்டம் தாய்மார்களுக்கு பாதுகாப்பான பிரசவத்திற்கும், முதல் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கும் உதவுகிறது. இதற்கான இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, 2023-24 நிதியாண்டின் போது, பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை 53,76,728 ஆக இருந்தது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2112761)
TS/PLM/AG/KR
(Release ID: 2112885)
Visitor Counter : 33