கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கூட்டுறவு தரவுத்தளம்

Posted On: 18 MAR 2025 3:14PM by PIB Chennai

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் ஆதரவுடன் மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம் ஒரு விரிவான தேசிய கூட்டுறவு தரவுத்தளத்தை மூன்று கட்டங்களாக ஏற்கனவே உருவாக்கியுள்ளது. தேசிய கூட்டுறவு தரவுத்தளம்  2024 மார்ச் 08 அன்று தொடங்கப்பட்டது. இந்த நோக்கத்திற்காக அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளால் கூட்டுறவு சங்கங்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, உள்ளீடு செய்யப்பட்டு தரவுத்தளத்தில் புதுப்பிக்கப்படுகின்றன. இந்த தரவுத்தளம் நாடு முழுவதும் உள்ள 8.25 லட்சத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களின் தகவல்களுக்கான ஒரே அணுகலை வழங்குகிறது.

தேசிய கூட்டுறவு தரவுத்தளத்தை  https://cooperatives.gov.in ல் வெளிப்படையாக அணுகலாம். இருப்பிடம், உறுப்பினர், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் இணைப்புகள் போன்ற அளவுருக்கள் குறித்த தரவுகளை தேசிய கூட்டுறவு தரவுத்தளம் சேகரிக்கிறது. இது அணுகப்பட்ட மற்றும் அணுகப்படாத கிராம பஞ்சாயத்துகள் உட்பட கூட்டுறவுகளின் புவியியல் பரவலில் உள்ள இடைவெளிகளை அடையாளம் காண உதவுகிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2112224)
TS/IR/RR/KR


(Release ID: 2112340) Visitor Counter : 24