சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியா புத்தாக்க உச்சி மாநாட்டை மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் தொடங்கி வைத்தார் - காசநோயை ஒழிப்பதற்கான முன்னோடித் தீர்வுகள்
Posted On:
18 MAR 2025 2:01PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபம் மாநாட்டு மையத்தில் இன்று இந்தியா புத்தாக்க உச்சிமாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த உச்சிமாநாட்டை சுகாதார ஆராய்ச்சித் துறை-இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய காசநோய் பிரிவு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் ஒழிப்பை நோக்கிய இந்தியாவின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதை இந்த உச்சிமாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய திருமதி அனுப்பிரியா படேல், காசநோய் கட்டுப்பாட்டில் நாட்டின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் இந்த இயக்கத்தில் புதிய கண்டுபிடிப்புகளின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். புதுத்தாக்கங்கள் மற்றும் தரமான சுகாதார சேவைகள் கடைக்கோடி பகுதி வரை சென்றடைவதை உறுதி செய்வதில் அவர்களில் பலர் முக்கியப் பங்கு வகித்துள்ளதாக கூறினார்.
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் சாதனைகளை எடுத்துரைத்த திருமதி படேல், "2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்கும் இலக்கை நோக்கி இந்தத் திட்டம் சீராக முன்னேறிச் செல்வதாக தெரிவித்தார். 2015-ல் 15 லட்சமாக இருந்த சிகைச்சக்கு விடுபட்டவர்களின் எண்ணிக்கை 2023-ல் 2.5 லட்சமாகக் குறைந்தது என்றும, இந்த திட்டத்தின் மூலம் 2023, 2024-ம் ஆண்டுகளில் முறையே 25.5 லட்சம் மற்றும் 26.07 லட்சம் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை அறிவிக்க முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய காசநோய் அறிக்கை 2024 ஐ மேற்கோள் காட்டி பேசிய திருமதி படேல், "இந்தியாவில் காசநோயின் பாதிப்பு விகிதம் 2015-ல் ஒரு லட்சம் பேருக்கு 237 பேராக இருந்த நிலையில், 2023-ல் ஒரு லட்சம் பேருக்கு 195 பேராக அதாவது 17.7% குறைந்துள்ளது என்று அவர் கூறினார். காசநோய் இறப்புகளைப் பொறுத்தவரை 2015-ம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 28 பேர் என்று இருந்த நிலையில், அது 2023-ம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 22 ஆக அதாவது 21.4% குறைந்துள்ளது என்று தெரிவித்தார். "இந்தியாவில் காசநோய் சிகிச்சை பாதுகாப்பு கடந்த எட்டு ஆண்டுகளில் 32% அதிகரித்துள்ளது, 2015-ல் 53% ஆக இருந்தது 2023 இல் 2023-ல் 85% ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்."
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112158
***
TS/IR/RR/KR
(Release ID: 2112231)
Visitor Counter : 31