பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
மகாராஷ்டிராவின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.620 கோடி15-வது நிதி ஆணைய மானியம்
Posted On:
18 MAR 2025 8:00AM by PIB Chennai
மகாராஷ்டிராவில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25 நிதியாண்டில் பதினைந்தாவது நிதிக்குழு மானியங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.ஒருங்கிணைந்த மானியத்தின் இரண்டாம் தவணைத்தொகை ரூபாய் 611.6913 கோடி மற்றும் ஒருங்கிணைந்த மானியத்தில் முதல் தவணையின் நிலுவைத் தொகை ரூபாய் 8.4282 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தின் தகுதியான 4 மாவட்ட ஊராட்சிகள், 40 தகுதியான வட்டார ஊராட்சிகள் மற்றும் 21551 தகுதியுள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்படும்.
அரசியலமைப்பின் பதினோராவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இருபத்தி ஒன்பது (29) அம்சங்களின் கீழ், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேவைகளுக்கு இந்த ஒதுக்கீடு செய்யப்படாத மானியங்கள் பயன்படுத்தப்படும் , சம்பளம் மற்றும் பிற நிறுவன செலவுகள் தவிர. பிணைக்கப்பட்ட மானியங்கள் (அ) சுகாதாரம் மற்றும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையைப் பராமரித்தல், மற்றும் இதில் வீட்டுக் கழிவுகளின் மேலாண்மை மற்றும் சுத்திகரிப்பு, குறிப்பாக மனித கழிவுகள் மேலாண்மை மற்றும் குடிநீர் வழங்குதல், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி ஆகியவை அடங்கும். மத்திய அரசு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் (குடிநீர் மற்றும் துப்புரவு துறை) மூலம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக மாநிலங்களுக்கு பதினைந்தாவது நிதிக்குழு மானியத்தை விடுவிக்க பரிந்துரைக்கிறது. ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியம் பரிந்துரைக்கப்பட்டு ஒரு நிதியாண்டில் 2 தவணைகளில் வழங்கப்படுகிறது. மத்திய நிதிக்குழு மானியத்தின் பகிர்வு பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்து, அவற்றின் உள்ளூர் வளர்ச்சித் தேவைகளை திறம்பட எதிர்கொள்ள உதவுகிறது.
***
(Release ID: 2112072)
TS/IR/RR/KR
(Release ID: 2112127)
Visitor Counter : 22