பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அமெரிக்க தேசிய புலனாய்வுத் துறை இயக்குநர் திருமிகு துளசி கப்பார்டு பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்


வாஷிங்டன் டி.சி.யில் அதிபர் திரு டிரம்ப்புடன் தாம் நடத்திய மிகவும் பயனுள்ள விவாதங்களை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

தனது அமெரிக்க பயணத்தின்போது திருமிகு துளசி கபார்டுடன் கலந்துரையாடியதை நினைவு கூர்ந்த பிரதமர், ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் அவரது பங்களிப்புக்குப் பாராட்டு தெரிவித்தார்

அதிபர் திரு டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் என்ற வகையில் அவரது பயணத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் குறிப்பிட்டார்

அதிபர் திரு டிரம்ப்புக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு அவரை வரவேற்க ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்தார்

Posted On: 17 MAR 2025 8:52PM by PIB Chennai

அமெரிக்க தேசிய புலனாய்வுத் துறை இயக்குநர் திருமிகு துளசி கப்பார்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

 

கடந்த மாதம் வாஷிங்டன் டி.சி.க்கு தாம் மேற்கொண்ட பயணத்தையும், அதிபர் திரு டிரம்ப்புடன் தாம் நடத்திய மிகவும் பயனுள்ள விவாதங்களையும் பிரதமர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

 

தனது அமெரிக்க பயணத்தின்போது திருமிகு துளசி கப்பார்டுடன் தாம் நடத்திய கலந்துரையாடலை நினைவுகூர்ந்த பிரதமர், பாதுகாப்பு, முக்கிய தொழில்நுட்பங்கள், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வது ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் அவரது முக்கிய பங்களிப்பைப் பாராட்டினார்.

 

அதிபர் திரு டிரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் உயர்மட்ட பயணம் என்ற வகையில் அவரது பயணம் அமைந்திருப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் குறிப்பிட்டார்.

 

அதிபர் திரு டிரம்ப்புக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவிற்கு வரும் அவரை வரவேற்கத் தாமும், இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களும் ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினார்.

 

***

RB/DL


(Release ID: 2112053) Visitor Counter : 20