ஜல்சக்தி அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: ஜல்-ஜீவன் இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளும் பெறப்பட்ட புகார்களும்
प्रविष्टि तिथि:
17 MAR 2025 4:48PM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குழாய் மூலம் நீர் வழங்குவதற்காக, மத்திய அரசு, மாநிலங்களுடன் இணைந்து, ஆகஸ்ட் 2019 முதல் ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.
சவால்களை முழுமையாக எதிர்கொள்ளவும், இவற்றை சமாளிக்கவும், மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த இயக்கத்தின் கீழ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மைத் திட்டம் (IWMP), பெருநிறுவன சமூக பொறுப்புடைமை நிதி போன்ற திட்டங்களுடன் ஒருங்கிணைந்து, ஆழ்துளை கிணறு செறிவூட்டல் கட்டமைப்புகள், மழைநீர் சேமிப்பு, தற்போதுள்ள நீர்நிலைகளை புனரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் இயக்கம் தொடர்பான பொது மக்களின் குறைகளைத் தீர்க்க, துறையின் இணையதளமான https://jalshakti-ddws.gov.in/ மூலமும், நேரடியாகவும் புகார்கள் பெறப்பட்டு உரிய காலத்தில் தீர்வு காணும் பொருட்டு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் குடிநீர் வழங்கல் துறைக்கு அவை அனுப்பப்படுகின்றன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/DL
(रिलीज़ आईडी: 2111977)
आगंतुक पटल : 41