சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் பாரம்பரிய ஊக்குவிப்பு திட்டம் சிறுபான்மையினரின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறது

Posted On: 17 MAR 2025 3:39PM by PIB Chennai

பிரதமரின் பாரம்பரிய ஊக்குவிப்பு திட்டம்(PM VIKAS) என்பது  சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் ஒரு முதன்மைத் திட்டமாகும்இது 'சீகோ அவுர் கமாவோ', 'நை மன்ஸில்', 'நை ரோஷ்னி', 'ஹமாரி தரோஹர்' மற்றும் 'உஸ்தாத்' ஆகிய ஐந்து முந்தைய திட்டங்களை ஒருங்கிணைத்து தொடங்கப்பட்டுள்ளது.

திறன் மேம்பாட்டின் மூலம் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள ஆறு சிறுபான்மை சமூகங்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது; சிறுபான்மை பெண்களின் தொழில்முனைவு மற்றும் தலைமைத்துவம்; மற்றும் பள்ளி இடைநிற்றலுக்கு பிந்தைய  கல்வி ஆதரவு, தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகம் வழங்கும் கடன் திட்டங்களுடன் பயனாளிகளை இணைப்பதன் மூலம் கடன்  வழங்குதலை எளிதாக்குதல் ஆகியவற்றுக்கு இந்த திட்டம் வழிவகை செய்கிறது.

ஹுனார் ஹாத், லோக் சம்வர்தன் பர்வ் போன்ற அமைச்சகத்தின் முன்முயற்சிகள் பாரம்பரிய கைவினைஞர்களிடையே அவர்களின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தொழில்முனைவை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 2015 ம் ஆண்டு முதல் தற்போது வரை, நாடு முழுவதும் இதுபோன்ற 43 நிகழ்வுகளை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு இந்தத் தகவலைத் தெரிவித்தார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111797

***

TS/IR/LDN/KR/DL


(Release ID: 2111960) Visitor Counter : 15