பாதுகாப்பு அமைச்சகம்
புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்க தேசியப் புலனாய்வு இயக்குனரைச் சந்தித்தார்
Posted On:
17 MAR 2025 3:32PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், அமெரிக்க தேசியப் புலனாய்வு இயக்குநர் திருமதி துளசி கப்பார்டை புதுதில்லியில் இன்று (2025 மார்ச் 17 ) சந்தித்தார்.
அமெரிக்க அதிபர் திரு. டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி அண்மையில் நடத்திய சந்திப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின் அடிப்படையில், இந்தியா-அமெரிக்க இருதரப்பு பாதுகாப்பு கூட்டாண்மையின் வளர்ந்து வரும் வலிமையை இந்த சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான விரிவான உலகளாவிய உத்திசார் ஒத்துழைப்பில் பாதுகாப்பு முக்கிய தூணாக உள்ளது என்பதை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.
இந்தியா, அமெரிக்கா இடையே கடல்சார் ஒத்துழைப்பு, தகவல் பகிர்வு ஒத்துழைப்பு, பாதுகாப்பு தொழில்துறை விநியோக அமைப்புகளை ஒருங்கிணைத்தல், ராணுவப் பயிற்சி ஆகியவை குறித்து திரு ராஜ்நாத் சிங், திருமதி.துளசி கபார்ட் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பரஸ்பர பாதுகாப்பு நலன்களை முன்னெடுத்துச் செல்வதில் தங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், அதிநவீன பாதுகாப்பு கண்டுபிடிப்புகள் மற்றும் முக்கிய தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை இரு தலைவர்களும் ஆராய்ந்தனர்.
இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான அமெரிக்க தேசியப் புலனாய்வு இயக்குநரின் உறுதியான நல்லெண்ணம் மற்றும் பாராட்டுதலுக்கு பாதுகாப்பு அமைச்சர் நன்றி தெரிவித்தார், இதுபோன்ற உணர்வுகள் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான நட்பின் பிணைப்பை மேலும் வலுப்படுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
***
TS/IR/LDN/KR/DL
(Release ID: 2111945)
Visitor Counter : 18