சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தொற்றுநோய் தடுப்பு தயார்நிலை குறித்த குவாட் பயிலரங்கை மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் தொடங்கி வைத்தார்

Posted On: 17 MAR 2025 11:44AM by PIB Chennai

இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பெருந்தொற்று தடுப்பு தயார்நிலை குறித்த குவாட் பயிலரங்கை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா சிங் படேல் இன்று தொடங்கி வைத்தார்.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த 3 நாள் பயிலரங்கில், உலகளவில் சுகாதார அவசரகாலக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்தற்கான தயார்நிலை மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை உறுதி செய்தல், மனிதன், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பன்முகத்தன்மை கொண்ட சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துதல் ஆகிய கருத்துகள் விவாதிக்கப்பட்டன.

இதில் உரையாற்றிய இணையமைச்சர் திருமதி படேல் இந்தப் பயிலரங்கம் அண்மைக் காலங்களில் வளர்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் சர்வதேச அளவிலான சுகாதார பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தப்டுத்துவதுடன் அவற்றின் தயார்நிலை, மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் ஆகியவற்றின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று கூறினார்.

உலகளவில் தொற்றுநோய் தடுப்புக்கான தயார்நிலை மற்றும் அதனை எதிர்கொள்வதற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளை எடுத்துரைத்த திருமதி படேல், "தொற்றுநோய்களை எதிர்கொள்வதற்கான செயல்பாடுகளுக்குரிய நிதியத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியா 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இந்த அமைப்பின் நீண்டகால செயல்பாட்டை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 12 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111705

***

TS/SV/RJ/KR


(Release ID: 2111763) Visitor Counter : 24