பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை 2025 பிப்ரவரி மாதத்தின் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் 31வது அறிக்கையை வெளியிட்டது
Posted On:
17 MAR 2025 11:35AM by PIB Chennai
நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு துறை 2025 பிப்ரவரி மாதத்திற்கான மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் 31 வது மாதாந்திர அறிக்கையை வெளியிட்டது.
2025 பிப்ரவரியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் மொத்தம் 50,088 குறைகளுக்குத் தீர்வுகள் காணப்பட்டுள்ளன. மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் இணையதளத்தில் உள்ள தகவலின்படி 2025 பிப்ரவரி 28 வரை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 1,90,994 குறைகள் நிலுவையில் உள்ளன.
இந்த இணையதளத்தில் 2025 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 47,599 புதிய பயனர்கள் பதிவு செய்துள்ளனர், அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 7,312 பயனர்கள் பதிவு செய்துள்ளனர்.
2025 பிப்ரவரியில் பொதுச் சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட குறைகள் குறித்த மாநில வாரியான பகுப்பாய்வையும் இந்த அறிக்கை வழங்குகிறது. பொதுசேவை மையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள புகார்களின் மாநில வாரியான பகுப்பாய்வுகளையும் இந்த அறிக்கை தருகிறது. இவை 2.5 லட்சம் கிராம நிலையிலான தொழில் முனைவோர்கள் செயல்படுத்தும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுசேவை மையங்களோடு இந்த மையப்படுத்தப்பட்ட மக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு இணைக்கப்பட்டுள்து. 2025 பிப்ரவரி மாதத்தில் பொதுசேவை மையங்கள் மூலம், 5,580 குறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 1,697 குறைகளும் பஞ்சாபில் 238 குறைகளும் பதிவு செய்யப்பட்டன.
2025 பிப்ரவரி மாதத்தில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 52,464 பொதுமக்கள் குறைகள் பெறப்பட்டு 50,088 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111703
+++
TS/IR/LDN/KR
(Release ID: 2111759)
Visitor Counter : 15