இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தில்லியில் நாளை உடல் திறன் இந்தியா திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார்
Posted On:
15 MAR 2025 5:18PM by PIB Chennai
முதலாவது உடல் திறன் இந்தியா திருவிழாவை (ஃபிட் இந்தியா கார்னிவல்) நாளை (2025 மார்ச் 16) தில்லி ஜேஎல்என் ஸ்டேடியத்தில் மாண்புமிகு மத்திய இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தொடங்கி வைக்கிறார். இதில், இளைஞர் நலன் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே, பாலிவுட் நட்சத்திரம் ஆயுஷ்மான் குரானா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மார்ச் 20 முதல் 27 வரை தில்லியில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டியின் சின்னம், இலச்சினை, பாடல் ஆகியவையின் வெளியீடும் இந்த நிகழ்ச்சியில் நடைபெறும்.
2025 மார்ச் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மூன்று நாள் உடற்பயிற்சி, ஆரோக்கிய திருவிழாவான ஃபிட் இந்தியா கார்னிவல் எனப்படும் உடல் திறன் இந்தியா திருவிழா, ஆரோக்கியமான உடல் பருமன் இல்லாத தேசம் என்ற பார்வையுடன், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முக்கிய விருந்தினர்கள் உடற்பயிற்சி சவால்கள் உட்பட உடல் திறன் தொடர்பான உரையாடல்களில் ஈடுபடுவார்கள்.
இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய விளையாட்டு அறிவியல் - ஆராய்ச்சி மையத்தின் (என்சிஎஸ்எஸ்ஆர்) மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், உளவியலாளர்கள் போன்றவர்கள் திருவிழாவிற்கு வருகை தரும் மக்களுக்கு இலவசமாக மதிப்பீடுகளை வழங்குவார்கள்.
களரிப்பயட்டு, மல்லகம்பம், கட்கா நிகழ்ச்சிகள் உள்ளிட்டவையும், "நடனத்தின் மூலம் உடற்பயிற்சி" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட கலாச்சார நிகழ்ச்சிகளும் இந்த மூன்று நாட்களில் நடைபெறும்.
***
PLM/KV
(Release ID: 2111520)
Visitor Counter : 14