அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

குங்குமப்பூ உற்பத்தியில் இந்தியாவின் மையமாக வடகிழக்குப் பகுதி உருவெடுக்கும்; நெக்டார் வேளாண் தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திடும்: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 13 MAR 2025 5:31PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல், அணுசக்தி , விண்வெளி, பிரதமர் அலுவலகம், ஊழியர், குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றின் இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், 2021-ம் ஆண்டு முதல் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் குங்குமப்பூ சாகுபடி விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டதோடு  நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் குங்குமப்பூ உற்பத்தி இயக்கம் மேற்கொண்டு வரும் முன்முயற்சிகள் குறித்தும்  எடுத்துரைத்தார். மெஞ்சுகா (அருணாச்சல பிரதேசம்), யூக்சோம் (சிக்கிம்) ஆகிய பகுதிகளில் தற்போது மிகப்பெரிய அளவில் குங்குமபூ சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களிலும் குங்குமபூ சாகுபடியை விரிவுபடுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஜம்மு-காஷ்மீரின் பாம்போருக்குப் பிறகு வடகிழக்கு இந்தியா அடுத்த குங்குமப்பூ உற்பத்தி மையமாக உருவெடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இத்திட்டம் பயிரிடப்படாத தரிசு நிலங்களைப் பயன்படுத்தி சாகுபடியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள பயிர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல், குங்குமப்பூ சாகுபடி திட்டம் வேளாண் திறனை மேம்படுத்துகிறது.

ஷில்லாங்கில் வடகிழக்கு தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் ரீச் மையத்தின் (நெக்டார்)புதிய நிரந்தர வளாகத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை அடுத்த  குங்குமப்பூ உற்பத்தி மையமாக உருவெடுக்கச் செய்யும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், வடகிழக்குப் பிராந்தியத்தின் விரைவான மாற்றம் தொழில்நுட்ப, வேளாண் முன்னேற்றங்களுக்கான புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை சுட்டிக்காட்டியதோடு இந்த மண்டலத்தில் சாலை, ரயில்வே மற்றும் விமானப்போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் தொலைதூரப் பகுதிகளுக்கான போக்குவரத்து தொடர்புகள் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111240

***

TS/SV/RJ/DL


(Release ID: 2111280) Visitor Counter : 34


Read this release in: English , Urdu , Hindi , Bengali-TR