ஆயுஷ்
azadi ka amrit mahotsav

சர்வதேச யோகா தினம் 2025-ன் முன்னோட்டமாக யோகா மகாப்பெருவிழா 2025-ஐ அமைச்சர் திரு பிரதாப் ராவ் இன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார்

Posted On: 13 MAR 2025 3:34PM by PIB Chennai

சர்வதேச யோகா தினம் 2025-ன் முன்னோட்டமாக யோகா மகாப் பெருவிழா 2025-ஐ மத்திய ஆயுஷ்  இணையமைச்சர்  (தனிப்பொறுப்பு) மற்றும் இணையமைச்சர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் திரு பிரதாப் ராவ் ஜாதவ் இன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார். யோகாவில் இந்தியாவின் உலகளாவிய தலைமைத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தனித்துவமான 10 சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களையும் அமைச்சர் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வீரேந்திர ஹெகடே, ஸ்ரீஷேத்ர தர்மஸ்தலாவின் தர்மாதிகாரி, மூத்த அரசு அதிகாரிகள், தலைசிறந்த யோகா குருக்கள், விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்களும் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினத்தை(ஜூன்21) கடைப்பிடிப்பதற்கு முன் நடத்தப்படும் 100 நாள் கவுன்ட் டவுன் நிகழ்வுகள் மிகவும் முக்கியமானவையாகும். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ், யோகா என்பது ஒரு வாழ்க்கைப் பாதை மட்டுமல்ல, உடல்நலத்தையும், மனநலத்தையும் பராமரிப்பதற்கான சக்திமிக்க வழிமுறையாகும் என்றார்.

சர்வதேச யோகா தினம் 2025 -க்கான தயாரிப்பு பணிகளுக்கான அமைப்பாளர்களுக்கு உதவும் வகையில், கையேடு ஒன்றையும் அமைச்சர் வெளியிட்டார்.

உலக சாதனையை நோக்கமாக கொண்டு 10,000 இடங்களில் யோகா செயல்விளக்கம் இருக்கும்.

யோகா அமர்வுகளை நடத்துவதற்கு 10 நாடுகளுடன் உலகளாவிய கூட்டாண்மை ஏற்படுத்தப்படும்.

சமூக ஈடுபாட்டிற்காக 1000 யோகா பூங்காக்கள் உருவாக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள் ஆகியோர் சிறப்பு யோகா நிகழ்வுகளில் இணைக்கப்படுவார்கள்.

பொது சுகாதாரத்தில் யோகாவின் பங்கு - 10 ஆண்டுக்கால தாக்கம் மதிப்பீடு செய்யப்படும்.

யோகா நிகழ்வுடன் மரக்கன்று நடுதல் மற்றும் தூய்மை இயக்கங்கள் இணைக்கப்படும்.

யோகாவிற்கு இளைஞர்களை ஈர்ப்பதற்கான நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

ஒரு வார கால யோகா மகா கும்ப நிகழ்ச்சி 10 இடங்களில் நடைபெறும்.

 நிறைவில் மையப்படுத்தப்பட்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார்.

ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக நவீன சுகாதாரத்துடன் யோகாவை இணைக்கும் 100 நாள் முன்முயற்சி மேற்கொள்ளப்படும்.

 
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111200

***

TS/SMB/AG/KR

 


(Release ID: 2111243) Visitor Counter : 20