தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிபி-ஷப்த் ஓராண்டை நிறைவு செய்துள்ளது : ஊடக நிறுவனங்களுக்கு உதவ கட்டணமில்லா சந்தாவுக்கான காலம் மார்ச் 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 13 MAR 2025 3:00PM by PIB Chennai

ஊடக நிறுவனங்களுக்கு ஒலி, ஒளி, எழுத்து வடிவிலான தகவல், புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் இலச்சினை இல்லாமல் அன்றாட செய்திகளை கிடைக்கச்செய்வதற்கு பிரசார் பாரதி- ஒலிபரப்பு மற்றும் பரவலாக்குவதற்கான  பகிரப்பட்ட  ஆடியோ, வீடியோக்கள் (பிபி-ஷப்த்) என்பது 2024 மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டது. இதனை 2026 மார்ச் வரை கட்டணமின்றி அணுகமுடியும் என்று பிரசார்  பாரதி அறிவித்துள்ளது. இது ஊடக நிறுவனங்களுக்கு குறிப்பாக சிறிய அளவில் செயல்படும் ஊடகங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

 நாள் முழுவதும் செயல்படுகின்ற 60 செய்திப் பிரிவுகள் மூலம் 1500 செய்தியாளர்களைக் கொண்ட வலுவான கட்டமைப்பு மூலம்  இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும்  செய்திகளை உடனுக்குடன்  பிபி-ஷப்த் வழங்குகிறது. மாநில செய்திப் பிரிவுகளிலிருந்தும், தலைமையகத்திலிருந்தும், முக்கியமான இந்திய மொழிகளில் வேளாண்மை, தொழில்நுட்பம், வெளியுறவு, அரசியல் நிகழ்வுப் போக்குகள் போன்ற 50 செய்தி வகைமைகளில்  ஆயிரத்திற்கும் அதிகமான செய்திகள் இதில் தினந்தோறும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

 shabd.prasarbharati.org  என்ற இணைய தளத்தில் ஊடக நிறுவனங்கள்  இணையலாம்.

உடனுக்குடன் செய்திகளை https://x.com/PBSHABD என்ற எக்ஸ் தளத்திலும்  https://www.instagram.com/pbshabd/ என்ற இன்ஸ்டாகிராமிலும் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2111174

***

TS/SMB/AG/KR


(रिलीज़ आईडी: 2111223) आगंतुक पटल : 67
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Malayalam , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Assamese , Telugu