பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் மொரீஷியஸ் பயணம்: ஒப்பந்தங்களின் பட்டியல்

Posted On: 12 MAR 2025 1:56PM by PIB Chennai

வ.எண்

ஒப்பந்தம்/புரிந்துணர்வு ஒப்பந்தம்

1.

எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர் நாணயங்களை (இந்திய ரூபாய் அல்லது மொரீஷியஸ் ரூபாய்) பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மொரீஷியஸ் வங்கி இடையே ஒப்பந்தம்.

2.

மொரீஷியஸ் அரசு (கடன் பெறுபவர்) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (கடன் வழங்கும் வங்கி என்ற முறையில்) இடையேயான கடன் வசதி ஒப்பந்தம்.

3.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையில் ஒத்துழைப்புக்காக மொரீஷியஸ் நாட்டின் தொழில், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் மற்றும் இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

4.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவு சேவை நிறுவனம் மற்றும் மொரீஷியஸ் குடியரசின் வெளியுறவு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

5.

மொரீஷியஸ் அரசின் பொதுச் சேவை மற்றும் நிர்வாகச் சீர்திருத்த அமைச்சகம் மற்றும் மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் நல்லாட்சிக்கான தேசிய மையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

6

இந்திய கடற்படை மற்றும் மொரீஷியஸ் அரசு இடையே கப்பல் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான தொழில்நுட்ப ஒப்பந்தம்.

7.

மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள கடல்சார் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் மற்றும் பிரதமர் அலுவலகம், கண்டத்திட்டு கடல்சார் மண்டல நிர்வாகம் மற்றும் ஆய்வு துறை (சிஎஸ்எம்ஜேஇஇ) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

8.

மலாக்க இயக்குநரகம் மற்றும் மொரீஷியஸ் குடியரசின் நிதிக் குற்றவியல் ஆணையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

வ.எண்

திட்டங்கள்

1.

அடல் பிஹாரி வாஜ்பாய் இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் சர்வீஸ் அண்ட் இன்னோவேஷன் (கேப் மால்ஹீரூக்ஸ்) மொரீஷியஸ் பகுதி சுகாதார மையம் மற்றும் 20 எச்.ஐ.சி.டி.பி திட்டங்கள் (பெயர் புதுப்பிக்கப்படும்).

 

ஒப்படைப்பு:

1. இந்திய கடற்படை கப்பலின் நீரியல் அளவீட்டிற்குப் பின் தயாரிக்கப்பட்ட செயின்ட் பிரண்டன் தீவில் வழிகாட்டி வரைபடம் ஒப்படைத்தல்.

அறிவிப்புகள்:

இந்தப் பயணத்தின்போது, மொரீஷியஸில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அமைப்பதற்கும், வளர்ச்சிக்கான கூட்டாண்மையை மேலும் மேம்படுத்த உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களின் இரண்டாம் கட்டத்திற்கும் இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி அறிவித்தார்.

***

 


       TS/PKV/RR/KR

(


(Release ID: 2111103) Visitor Counter : 32