கூட்டுறவு அமைச்சகம்
தேசிய கூட்டுறவு கொள்கையின் தற்போதைய நிலை
Posted On:
12 MAR 2025 3:33PM by PIB Chennai
"கூட்டுறவே வளம்" என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் கூட்டுறவு துறையின் செயல்பாடுகளை நிறைவேற்றும் வகையில் புதிய கூட்டுறவு கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதற்கென 2.9.2022 அன்று திரு சுரேஷ் பிரபாகர் பிரபு தலைமையில் கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தேசிய/மாநில/மாவட்ட/ தொடக்க கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கூட்டுறவுத்துறை செயலர் மற்றும் மண்டல கூட்டுறவு சங்கங்கள், மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட தேசிய அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு 17 ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, நாடு முழுவதும் நான்கு மண்டலப் பயிலரங்குகளை ஏற்பாடு செய்து பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றது. இவ்வாறு பெறப்பட்ட ஆலோசனைகள் உரிய வகையில் கூட்டுறவு கொள்கையில் இணைக்கப்பட்டு, வரைவுக் கூட்டுறவு கொள்கை தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
***
TS/SV/AG/DL
(Release ID: 2111021)
Visitor Counter : 14