மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
படித்தல், எழுதுதல் மற்றும் புத்தக கலாச்சாரத்தை ஊக்கப்படுத்த பிஎம்-யுவ 3.0 தொடங்கப்பட்டுள்ளது
Posted On:
12 MAR 2025 6:59PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித்துறை பிஎம்-யுவ 3.0-ஐ 2025 மார்ச் 11 அன்று தொடங்கியுள்ளது. இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் இந்த திட்டம், 30 வயதுக்குட்பட்ட வளரும் எழுத்தாளர்களுக்கு படித்தல், எழுதுதல் மற்றும் புத்தக கலாச்சாரத்தை ஊக்கப்படுத்த வகை செய்கிறது.
பிஎம்-யுவ திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களில் இந்தியாவின் 22 மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வளரும் எழுத்தாளர்களின் பங்களிப்பு பெருமளவில் இருந்ததையடுத்து மூன்றாவது கட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தேச கட்டமைப்பில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பு, (10 எழுத்தாளர்கள்) இந்திய அறிவுமுறை (20 எழுத்தாளர்கள்), நவீன இந்தியாவை உருவாக்கியோர் (1950-2025) (20 எழுத்தாளர்கள்) என்ற மையப்பொருளில் படைப்புகளை உருவாக்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்திய பாரம்பரியம், கலாச்சாரம், அறிவுமுறை ஆகியவற்றை மேம்படுத்தும் பொருண்மைகளில் தொடர்ந்து எழுத்தாளர்களை உருவாக்க இந்த திட்டம் உதவும்.
இதற்காக அகில இந்திய அளவில் போட்டி நடத்தப்பட்டு, 50 எழுத்தாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். https://www.mygov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 2025 மார்ச் 11 முதல் 2025 ஏப்ரல் 10 வரை போட்டிகள் நடத்தப்படும். பின்னர், பெறப்பட்ட முன்மொழிவுகள் மதிப்பீடு செய்யப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளர்களின் பட்டியல் 2025 மே – ஜூன் மாதங்களில் வெளியிடப்படும். இவர்களுக்கு ஜூன் 30 முதல் டிசம்பர் 30 வரை தலைசிறந்த எழுத்தாளர்கள் / வழிகாட்டுவோர் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள த நேஷ்னல் புக் ட்ரஸ்ட் இதன் அமலாக்க முதன்மையாக இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் புத்தகங்கள், இந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்டு இந்தியாவின் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும். தெரிவு செய்யப்பட்ட இளம் எழுத்தாளர்கள், தலைசிறந்த எழுத்தாளர்களுடன் கலந்துரையாடவும், இலக்கிய விழாக்களில் பங்கு பெறவும் இது வாய்ப்பாக அமையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2110966
***
TS/SMB/RJ/ DL
(Release ID: 2111017)
Visitor Counter : 16