பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி இண்டியன் ஓஷன் விருதினை ஏற்றுக் கொண்டு பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 12 MAR 2025 2:59PM by PIB Chennai

மொரீஷியஸ் அதிபர்

மேதகு தரம்பீர் கோகுல் அவர்களே,

பிரதமர் மேதகு நவீன் சந்திர ராம்கூலம் அவர்களே,

மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே,

 

மொரீஷியஸின் மிக உயர்ந்த தேசிய விருது வழங்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனது கௌரவம் மட்டுமல்ல, இது 140 கோடி இந்தியர்களின் கௌரவம் ஆகும். இந்தியா-மொரீஷியஸ் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார, வரலாற்று ரீதியிலான நல்லுறவுக்கு இந்த விருது மரியாதை செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. பிராந்திய அமைதி, முன்னேற்றம், பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றில் இவ்விரு நாடுகளின் நிலைப்பாட்டை  அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. உலக அளவில் தென் பகுதியில் உள்ள நாடுகளின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களின் அடையாளமாகவும் இந்த விருது  திகழ்கிறது. இந்த விருதை பணிவுடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து மொரீஷியஸ் நாட்டுக்கு வந்து வசித்து வரும் மூதாதையர்களும், அவர்களின் அனைத்து தலைமுறைகளுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன். தங்கள் கடின உழைப்பின் மூலம், மொரீஷியஸ் நாட்டின் வளர்ச்சியில் ஒரு பொன்னான அத்தியாயத்தை எழுதி, அதன் பன்முகத்தன்மைக்கு அவர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இந்த கௌரவத்தை ஒரு பொறுப்பாகவும் ஏற்றுக்கொள்கிறேன். இந்தியா-மொரீஷியஸ் இடையே  நல்லுறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று எங்களது நிலைப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.

மிகவும் நன்றி.

***

TS/SV/AG/DL


(Release ID: 2110968) Visitor Counter : 17