ஜவுளித்துறை அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: கேட்டா பூத்தையல் கைவினைக்கலை ஊக்குவிப்பு
Posted On:
11 MAR 2025 12:09PM by PIB Chennai
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் அலுவலகமானது தேசிய கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுத் திட்டம், விரிவடைந்த கைவினைப் பொருட்கள் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டங்கள் பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் உட்பட நாடு முழுவதும் உள்ள கைவினைக் கலைகள் துறையை மேம்படுத்த உதவுகின்றன.
திறன் மேம்பாடு, தொகுப்பு உருவாக்கம், உற்பத்தியாளர் நிறுவனங்களை அமைத்தல், கைவினைக் கலைஞர்களுக்கு நேரடிப் பலன் பரிமாற்றம், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உதவி ஆகியவற்றுக்கு தேவையின் அடிப்படையில் இந்தத் திட்டங்கள் உதவி செய்கின்றன. இவை பீகாரின் கிஷன்கஞ்சில் கேட்டா பூத்தையல், சுஜானி பூத்தையல் உள்ளிட்ட பாரம்பரிய கைவினைத் தொழில்களுக்கு பயனுள்ளவையாக உள்ளன.
தனித்துவமான இத்தகைய கைத்தறி துணிகளை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கொண்டுசெல்லவும், சந்தைப்படுத்தவும் கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள், வாங்குவோர், விற்போர் சந்திப்பு, இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சி போன்றவை நடத்தப்படுகின்றன.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ்சிங் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2110106
***
TS/SMB/AG/DL
(Release ID: 2110466)