ஜவுளித்துறை அமைச்சகம்
தேசிய, மாநில விருது பெற்ற பெண் கைவினைஞர்களின் கலை படைப்புகளின் பிரத்யேக கண்காட்சியுடன் சர்வதேச மகளிர் தினத்தை குடிசைத் தொழில் கழகம் (த காட்டேஜ்) கொண்டாடியது
Posted On:
10 MAR 2025 5:03PM by PIB Chennai
மத்திய குடிசைத் தொழில்கள் கழக நிறுவனமான தி காட்டேஜ் சர்வதேச மகளிர் தினம் 2025-ஐ தேசிய, மாநில விருது பெற்ற பெண் கைவினைஞர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தும் தனித்துவமான கண்காட்சியுடன் பெருமையுடன் கொண்டாடியது. மத்திய குடிசைத் தொழில்கள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு மனோஜ் லால் முன்னிலையில் மார்ச் 8 அன்று நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை துணை ஆணையர் திருமதி காத்யாயானி சஞ்சய் பாட்டியா இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
குடிசைத் தொழில் துறையில் கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களின் முக்கியத்துவத்தை திரு மனோஜ் லால் சுட்டிக் காட்டினார், மேலும் மத்திய குடிசைத் தொழில்கள் கழகம் நாடு முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட பெண் கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு சந்தைப்படுத்தல் தளத்தை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளித்து வருவதை எடுத்துரைத்தார். இந்த முயற்சி பிரதமரின் தற்சார்பு இந்தியா மற்றும் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை என்ற தொலைநோக்குப் பார்வைக்கு நேரடியாக பங்களிக்கிறது. மேலும், திறமையான பெண் கைவினைக் கலைஞர்களை தொழில்முனைவோராக மாற்றவும், தற்சார்பை வளர்க்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் ஊக்குவித்து வருகிறது என்று திரு மனோஜ் லால் குறிப்பிட்டார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தி காட்டேஜ் கண்காட்சி நடைபெறும் நாட்களில் பெண் வாடிக்கையாளர்களுக்கு 15% சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டது. இந்த பிரத்தியேக சலுகை பெண் கலைஞர்களைக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவும், தங்கள் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தி தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய திறமையான பெண் கைவினைஞர்களுடன் கலந்துரையாடவும் ஊக்குவித்தது.
தேசிய மற்றும் மாநில விருது பெற்ற பெண் கைவினைஞர்கள் 2025 மார்ச் 8 முதல் 13 வரை புதுதில்லி ஜன்பத்தில் உள்ள ஜவஹர் வியாபார் பவனில் நடைபெறும் கண்காட்சியில் தங்கள் தயாரிப்புகளை நேரடி செயல் விளக்கத்துடன் காட்சிப்படுத்துகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109911
-----
TS/IR/KPG/KR/DL
(Release ID: 2109984)
Visitor Counter : 14