தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
இ-ஷ்ரம் தளத்தில் 30.68 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்; இதில் பெண்களின் பதிவு 53.68% ஆகும்
Posted On:
10 MAR 2025 2:45PM by PIB Chennai
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆதாருடன் இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் விரிவான தேசிய தரவுத்தளத்தை உருவாக்குவதற்காக 2021 ஆகஸ்ட் 26 அன்று இ-ஷ்ரம் தளத்தை (eshram.gov.in) அறிமுகப்படுத்தியது. இ-ஷ்ரம் தளம் என்பது அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சுய அறிவிப்பு அடிப்படையில் ஒருங்கிணைந்த கணக்கு எண்ணை வழங்குவதன் மூலம் பதிவு செய்து ஆதரிப்பதாகும். 2025 மார்ச் 3 நிலவரப்படி, 30.68 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் ஏற்கனவே இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் (53.68%) ஆவர்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அணுகுவதற்கு ஒற்றை சாளர தீர்வாக இ-ஷ்ரம் தளத்தை உருவாக்குவது குறித்த பட்ஜெட் அறிவிப்பின் தொலைநோக்கு பார்வையை மனதில் கொண்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 2024 அக்டோபர் 21 அன்று இ-ஷ்ரம்-ன் ஒற்றை சாளர தீர்வை அறிமுகப்படுத்தியது.
இ-ஷ்ரம் – ஒற்றைச் சாளர தீர்வு என்பது பல்வேறு சமூகப் பாதுகாப்புநலத்திட்டங்களை ஒரே தளத்தில், அதாவது இ-ஷ்ரம் மூலம் ஒருங்கிணைக்க வழிவகை செய்கிறது. இது இ-ஷ்ராமில் பதிவுசெய்துள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அணுகவும், இ-ஷ்ரம் மூலம் இதுவரை அவர்கள் பெற்றுள்ள பலன்களைக் காணவும் உதவுகிறது.
இ-ஷ்ரம் தளத்தின் அணுகலை மேம்படுத்த, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பாஷினி தளத்தைப் பயன்படுத்தி 2025 ஜனவரி 7 அன்று இ-ஷ்ரம் தளத்தில் பன்மொழி செயல்பாட்டை அறிமுகப்படுத்தியது. இந்த மேம்பாடு இப்போது தொழிலாளர்கள் 22 இந்திய மொழிகளில் இ-ஷ்ரம் தளத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை உடனடியாகக் கிடைக்கச் செய்ய, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 2025 பிப்ரவரி 24 அன்று இ-ஷ்ரம் மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது. இந்த பயன்பாடு இ-ஷ்ரம் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட நலத்திட்டங்களுக்கு நிகழ்நேர அணுகலை வழங்குகிறது.
தமிழ்நாட்டில் 90,69,411 அமைப்புசாரா தொழிலாளர்களும், புதுச்சேரியில் 1,90,711 அமைப்புசாரா தொழிலாளர்களும் இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு. ஷோபா கரந்தலஜே இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109828
-----
TS/IR/KPG/KR
(Release ID: 2109896)
Visitor Counter : 37