வெளியுறவுத்துறை அமைச்சகம்
ஐநா அமைதி காக்கும் பணியில் இந்தியாவின் மரபு: தலைமை, அர்ப்பணிப்பு மற்றும் தியாகம்
Posted On:
09 MAR 2025 11:58AM by PIB Chennai
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதை முதன்மை இலக்காகக் கொண்டு 1945-ல் ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டது. அதன் தொடக்கத்தில் இருந்து, ஐ.நா. அமைதி காத்தல் என்பது மோதலில் இருந்து அமைதிக்கு சவாலான பாதையில் செல்ல நாடுகளுக்கு உதவும் மதிப்புமிக்க ஒரு படையான 50-க்கும் மேற்பட்ட ஐநா பணிகளில் 2,90,000 க்கும் மேற்பட்ட அமைதி காக்கும் படையினருடன், உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு இந்தியா முக்கிய பங்களிப்பாளராக இருந்து வருகிறது. தற்போது, 5,000 -க்கும் மேற்பட்ட இந்திய அமைதி காக்கும் படையினர் 9 பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், சர்வதேச அமைதியை மேம்படுத்த சவாலான சூழ்நிலையில் பணிபுரிகின்றனர்.
ப்ளூ ஹெல்மெட் எனப்படும் ஐ.நா அமைதி காக்கும் படையினர் ஐக்கிய நாடுகள் சபையின் கொடியின் வெளிர் நீல நிறத்தில் இடம் பெற்றது. 1947-ம் ஆண்டில், ஐநா இந்த நிறத்தை முடிவு செய்தது, ஏனெனில் நீலம் அமைதியைக் குறிக்கிறது, அதே நேரத்தில் சிவப்பு பெரும்பாலும் போருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வெளிர் நீல நிற நிழல் பின்னர் ஐ.நா.வின் சின்னமாக மாறியுள்ளது.
2023 -ம் ஆண்டில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் தியாகம் செய்ததற்காக இந்திய அமைதி காக்கும் வீரர்களான ஷிஷுபால் சிங் மற்றும் சன்வாலா ராம் விஷ்னோய் மற்றும் சிவிலியன் ஐ.நா ஊழியர் ஷேபர் தாஹெர் அலி ஆகியோருக்கு மரணத்திற்குப் பின் ஐ.நா.வின் மிக உயர்ந்த அமைதி காக்கும் கௌரவமான டாக் ஹமர்ஸ்க்ஜோல்ட் பதக்கத்தை இந்தியா பெற்றது.
2025 பிப்ரவரி 24 முதல் 25 வரை, ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் மையம் புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ‘உலகளாவிய தெற்கில் இருந்து அமைதி காக்கும் பெண்களுக்கான மாநாட்டை’ நடத்தியது. இந்த இரண்டு நாள் நிகழ்வில், 35 நாடுகளைச் சேர்ந்த பெண் அமைதி காக்கும் படையினர், அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பெண்களின் வளர்ச்சியடைந்து வரும் பங்கு மற்றும் அவர்களின் பங்கேற்பை மேம்படுத்துவதற்கான உத்திகள் குறித்து விவாதித்தனர். இந்த மாநாடு பாலின சமத்துவத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை விளக்கியதுடன், உள்ளடக்கிய மற்றும் பயனுள்ள அமைதி காக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் அதன் தலைமைப் பண்பைப் பிரதிபலித்தது.
1950- களில் இருந்து, இந்தியா 290,000 அமைதி காக்கும் வீரர்களை உலகளவில் 50- க்கும் மேற்பட்ட பணிகளுக்கு அனுப்பியுள்ளது, இது ஐநா அமைதி காக்கும் முயற்சிகளில் மிகப்பெரிய பங்களிப்பாளராக உள்ளது. இன்று, 5,000 -க்கும் மேற்பட்ட இந்திய துருப்புக்கள் தற்போது செயல்பாட்டில் உள்ள பதினொரு இடங்களில்,ஒன்பதில் சேவை செய்கின்றனர். இவர்கள், பெரும்பாலும் ஆபத்தான மற்றும் விரோதப் பகுதிகளில், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளனர். இந்த உன்னதமான முயற்சியில், ஏறக்குறைய 180 இந்திய அமைதி காக்கும் படையினர் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர் - அவர்களின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும்.
உலகளாவிய தென் நாடுகளுக்கு அவர்களின் அமைதி காக்கும் திறன்களை வலுப்படுத்த உதவுவதற்கு இந்தியா அர்ப்பணிப்புடன் உள்ளது. ஐநா அமைதி காக்கும் மையத்தின் மூலம், 2023-ம் ஆண்டில் ஆசியான் நாடுகளுக்காக நடத்தப்படும் பெண் அமைதிப் படைகளுக்கான சிறப்புப் படிப்புகள் உட்பட பயிற்சி மற்றும் திறனை மேம்படுத்தும் திட்டங்களை இந்தியா தொடர்ந்து வழங்குகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் மையத்தில் அமைதி காத்தல் என்பது உரையாடல், ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பால் இயக்கப்படுகிறது. இந்த அர்ப்பணிப்பு, தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின் முக்கியத்துவம் மற்றும் வளரும் நாடுகளில் அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் ஒரு தலைவராக இந்தியாவின் பங்களிப்பின் மீதான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இந்திய அமைதி காக்கும் படையினர் பல்வேறு மற்றும் சவாலான சூழல்களில் பணியாற்றியுள்ளனர், பல்வேறு பிராந்தியங்களில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இந்திய அமைதி காக்கும் பெண்கள் சர்வதேச அரங்கில் முன்னுதாரணமாகி, தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை மூலம் மற்றவர்களை ஊக்குவிக்கின்றனர். அவர்களின் பங்களிப்புகள் அமைதி காக்கும் பணிகளின் செயல்திறனை மேம்படுத்தியதுடன் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள அமைதி செயல்முறைகளில் பெண்களை அதிக அளவில் சேர்ப்பதற்கும் வழி வகுத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109587
*****
PKV /DL
(Release ID: 2109603)
Visitor Counter : 34