மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மீன்வளத் துறை ஐதராபாதில் மீன்வள ஸ்டார்ட்அப் மாநாடு 2.0-ஐ நடத்தியது

Posted On: 08 MAR 2025 4:54PM by PIB Chennai

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளத் துறை, இன்று தெலுங்கானாவின் ஐதராபாதில் மீன்வள ஸ்டார்ட்அப் மாநாடு 2.0-க்கு ஏற்பாடு செய்திருந்தது.

 

இந்த மாநாட்டை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு  மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல், நித்தி ஆயோக் உறுப்பினர் பேராசிரியர் ரமேஷ் சந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மீன்வளத் துறையில் புதுமைகளை ஊக்குவிப்பதற்காக ஸ்டார்ட்அப் மாநாடு 2.0-க்கு மீன்வளத் துறை ஏற்பாடு செய்தது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, உற்பத்தி மற்றும் தொடர்புடைய துறைகளில் ஸ்டார்ட்அப்களை ஆதரிப்பதற்காக மீன்வளத் துறையின் ஸ்டார்ட்அப் மாபெரும் சவால்  2.0 தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொழில்முனைவு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பில் நிலைத்தன்மையை வளர்ப்பது, உற்பத்தி மற்றும் செயல்திறனை மேம்படுத்துவது ஆகியவற்றை  நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்  மூலம் ரூ. 1 கோடி நிதியுதவியுடன் 10 வெற்றி பெறும் ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவு நீட்டிக்கப்படும். வெற்றி பெறும் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஐசிஏஆர் (ஐசிஏஆர் -மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம்) தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் அல்லது மீன்வளத் துறையின் கீழ் உள்ள பிற இணைக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கட்டமைக்கப்பட்ட இன்குபேஷன் ஆதரவு கிடைக்கும். இந்த இன்குபேட்டர்கள் ஸ்டார்ட்அப்களை வழிநடத்துவதில், திறன் மேம்பாட்டுத் திட்டங்களை வழங்குவதில் மற்றும் உற்பத்தி உள்கட்டமைப்பை அணுகுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

பிரதமரின் மத்சய சம்பட யோஜனா சலுகைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்காக, மீன்வள ஸ்டார்ட்அப் மாநாடு 2.0-ன் போது தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தின் மொபைல் செயலி தொடங்கப்பட்டது. இந்த அறிமுக விழாவிற்கு மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் தலைமை தாங்கினார்.இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109456

 

*****

SMB /DL


(Release ID: 2109512) Visitor Counter : 35