மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன்வள புத்தொழில் மாநாடு 2.0 நாளை தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது
प्रविष्टि तिथि:
07 MAR 2025 2:46PM by PIB Chennai
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளத் துறை நாளை (2025 மார்ச் 8 ) தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் மீன்வள புத்தொழில் மாநாடு 2.0 -வை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், அத்துறையின் இணையமைச்சர்கள் திரு ஜார்ஜ் குரியன், பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
புத்தொழில் மாநாடு 2.0 மீன்வளத் துறையில் புதுமைகளைக் குறித்து விவாதிக்க முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைக்கும். மேலும் இந்தியாவில் மீன்வள சுற்றுச்சூழல் அமைப்பு, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை மேற்கொண்டுள்ள முக்கியமான முன்முயற்சிகள் குறித்த ஆழமான விவாதங்களுக்கு ஒரு தளமாகவும் இருக்கும்.
***
(Release ID: 2109056)
TS/PKV/AG/RJ
(रिलीज़ आईडी: 2109152)
आगंतुक पटल : 46