பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
புதிய டிஜிட்டல் பிரச்சாரத்தில் கவனம் ஈர்க்கும் "சர்பஞ்ச் பதி" கலாச்சாரம்
Posted On:
07 MAR 2025 2:01PM by PIB Chennai
அடிமட்ட நிர்வாக அமைப்பில் பெண் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் பிரச்சாரத்தை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உள்ளூர் கிராமப்புற நிர்வாகத்தில் முக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை எடுத்துரைக்கும் வெப் தொடர்களை தயாரிக்க டிவிஎஃப் நிறுவனத்திற்கு பஞ்சாயத்ராஜ் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிறுவனத் தயாரிப்புகளில் முதல் வெப் தொடர் அஸ்லி பிரதான் கவுன்?" மார்ச் 4-ம் தேதி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் திரையிடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட பெண் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஒரு பெண் பஞ்சாயத்து தலைவர் பொது நலனுக்காக தனது அதிகாரங்களை எவ்வளவு திறம்பட பயன்படுத்துகிறார் என்பதை 'அஸ்லி பிரதான் கவுன்?' படம் விளக்குகிறது. மேலும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பெண் பிரதிநிதித்துவம் என்ற அரசியலமைப்பு ஆணையை குறைக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்களின் பணியில் ஆண் குடும்ப உறுப்பினர்கள் தலையிடும் 'சர்பஞ்ச் பதி' கலாச்சாரத்தின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இந்தத் தொடர் அமைந்துள்ளது. இதில் தனது கதாப்பாத்திரம் குறித்து பேசிய நடிகை நீனா குப்தா, கிராமப்புற இந்தியாவில் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை பிரதிபலிப்பதாக உள்ளது எனக் கூறினார்.
நடிகர்கள் துர்கேஷ் குமார் மற்றும் புல்லு குமார் ஆகியோர் நடிக்கும் மேலும் இரண்டு வெப் தொடர்களை வெளியிட பஞ்சாயத்ராஜ் அமைச்சகம் தீர்மானித்துள்ளது. இது கிராமப்புற நிர்வாகத்தில் அடிமட்ட அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி மாற்றத்தை உருவாக்கும் அமைச்சகத்தின் பணியை மேலும் முன்னெடுத்துச் செல்லும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109041
***
TS/GK/RJ/RJ
(Release ID: 2109149)
Visitor Counter : 26