பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆய்வுக்கூட்ட செயல் நிரல் தொகுப்புக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கை நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை நடத்தியது

प्रविष्टि तिथि: 06 MAR 2025 4:57PM by PIB Chennai

2024-ம் ஆண்டு டிசம்பர் 26 தேதியன்று நடைபெற்ற பிரகதி கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சகங்கள் / துறைகளில் பொதுமக்களின் குறைகளை மதிப்பீடு செய்யும் நடைமுறைகளை எளிதாக்குவது குறித்து அமைச்சரவைச் செயலாளர் 2025 ஜனவரி 30-ம் தேதியன்று அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.ஸஅதில் அனைத்துத் துறை சார்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள் தத்தமது துறைகளில் பொது மக்களின் குறைகளை களைவதற்கான நடவடிக்கைகளை இந்தப் புதிய அணுகுமுறையில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பிற்கான இணையதளத்தில் இதற்கென பிரத்யேக ஆய்வுக்கூட்ட நிரல் தொகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி குறை தீர்ப்பு மனுக்கள் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்த இணையதள வசதியைப் பயன்படுத்துவதற்கான  பயிலரங்கை நடத்துவது குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், இந்தப் புதிய நடைமுறையைப் பயன்படுத்த ஏதுவாக அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் வகையில் 2025 மார்ச் 5-ம் தேதி 3 மணி நேர திறன் மேம்பாட்டு பயிலரங்கு நடத்தப்பட்டது.

2024  டிசம்பர் 26–ம் தேதி நடைபெற்ற பிரதமரின் பிரகதி மறுஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதுபோல இந்தப் புதிய  குறை தீர்ப்பு செயல்முறைகளை மதிப்பாய்வு செய்வதற்கான  அமைப்பை தடையின்றி மேற்கொள்வதற்கு உதவிடும்.

----

TS/SV/KPG/KR/DL


(रिलीज़ आईडी: 2108894) आगंतुक पटल : 33
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi