இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஒலிம்பிக் போட்டிக்கான தயார் நிலை மற்றும் சிறந்த விளையாட்டு நிர்வாகம் தொடர்பான சிந்தனை முகாம் : மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை வகிக்கிறார்
Posted On:
06 MAR 2025 12:05PM by PIB Chennai
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்காக தயார் செய்து கொள்ளுதல் மற்றும் 2036 கோடைக்கால ஒலிம்பிக்கை நடத்துவதற்கான இந்தியாவின் முயற்சி ஆகியவை தொடர்பாக 2025 மார்ச் 7,8 தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சிந்தனை முகாமுக்கு மத்திய விளையாட்டு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை வகிக்கவுள்ளார்.
இந்த இரண்டு நாள் அமர்வில், பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டுத்துறை அமைச்சர்கள், மூத்த விளையாட்டு நிர்வாகிகள், முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் தொடர்பான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், உலகளாவிய விளையாட்டு மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான செயல்திட்டத்தை உருவாக்கவும் இந்த இரண்டு நாள் அமர்வு உதவும். விளையாட்டு நிர்வாகத்தை மேம்படுத்துதல், அடித்தள அளவில் திறமைகளை கண்டறிதல், விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாடு, உள்ளடக்குதல் ஆகியவை குறித்து இதில் கவனம் செலுத்தப்படும்.
***
(Release ID: 2108723)
TS/PLM/AG/RR
(Release ID: 2108766)
Visitor Counter : 27